இன்று காலையில் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து.

 


*ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து - பயணிகள் அலறியடித்து தப்பினர்*

📍 இடம்:* திருவள்ளூர், சோழவரம்

தேதி: 26.06.2026, வெள்ளி கிழமை 

சென்னை: இன்று காலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பேருந்தின் பின்பகுதியில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தினார். உடனே பயணிகள் அனைவரையும் கீழே இறங்கு மாறு எச்சரித்தார். 

பேருந்தில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும், பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது.

*விபத்துக்கான காரணம்:*

 ஏசி பேருந்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments