முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆன்மீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

ஆரணி சேவூரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா -

  ஆரணி, நவ.20:* ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி வடக்கு ஒன்றியம் சேவூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நூதன குடக்கரை ராஜகோபுர மஹா கும்பாபிஷேக (சம்ப்ரோக்ஷண) விழா இன்று (20.11.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் திருமிகு *சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA* அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் மற்றும் விழா குழுவினர், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மகாகவி பாரதி நகர் 4-வது பிரதான சாலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் திரு.அர்சல், திரு.தியாகு, திரு.பவன், திரு.செந்தில்குமார், திரு.ஹரிஹரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் - 1000 பக்தர்களுக்கு அன்னதானம், இரவில் திருவீதி

16/11/2026 நேற்று வில்லிவாக்கம் சிட்கோ பகுதி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதனைத் தொடர்ந்து இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. சுவாமி சிக்கோ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!

  சென்னை, நவ. 16: சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம் திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த திருக்காட்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா: அம்மனிடம் சக்திவேல் பெற்ற முருகன் - பக்தர்கள் பரவசம்!

  வில்லிவாக்கம், நவ. 15: வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று முழக்கமிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.  E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா, வில்லிவாக்கம்

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை: ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

*வில்லிவாக்கம், நவ. 11:* சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (11/11/2026, புதன்கிழமை) முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப் பெருமானுக்கு அழகிய ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என முழக்கமிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பக்தர்கள் அனைவரும் அதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்...

மேல்மலையனூர் செல்லும் பக்தர்கள் முதலில் யோக முனீஸ்வரரை வழிபடுவது சிறப்பு! 🙏🏻

  செஞ்சி, நவ. 9  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ யோக முனீஸ்வரர் ஆலயம், மேல்மலையனூர் செல்லும் பக்தர்களின் முதல் வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து வருகிறது. ஆடி அமாவாசை, மாதாந்திர அமாவாசை, ஆடி வெள்ளி, மாசி பெருவிழா உள்ளிட்ட விழாக் காலங்களில் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள், செஞ்சியில் அமைந்துள்ள யோக முனீஸ்வரரை வழிபட்ட பின்னர் மேல்மலையனூர் செல்வது வழக்கமாக உள்ளது.  *பக்தர்களின் நம்பிக்கை:* யோக முனீஸ்வரரை தரிசித்து, அவரிடம் உத்தரவு பெற்று, பின்னர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் இறையருள் முழுமையாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. acdd காவல் தெய்வமாக விளங்கும் முனீஸ்வரர், யாத்திரைக்கு தடையின்றி, பாதுகாப்பாக சென்று வர அருள்புரிவார் என்றும், தீய சக்திகள், கண் திருஷ்டி, தோஷங்கள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். *மேல்மலையனூர் சிறப்பு:* செஞ்சியில் ...

திருவண்ணாமலைக்கு புறப்பட்ட திருக்குடை - பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!

 வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாலியம்மன் கோவிலில் திருக்குடை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் கூட்டத்தோடு அம்மனின் திருக்குடை திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. இரவு முழுவதும் கோவில் வளாகம் மின் விளக்குகளால் ஜொலித்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருக்குடைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் பூக்குடை எடுத்தும், இளைஞர்கள் மேளம் அடித்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த திருவிழாவின் நேரடி ஒளிபரப்பை நம்ம ஊர் மீடியா YouTube சேனலில் காணலாம்.

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா அன்னாபிஷேகம் 2026 கோலாகலம் - பக்தர்கள் பரவசம்!

 சென்னை:* வில்லிவாக்கத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று மகா அன்னாபிஷேகம் (2026) வெகு விமரிசையாக நடைபெற்றது. உலக உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் அன்னத்தை கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகத்தின் சிறப்பாகும். இதன்படி, சுமார் 100 கிலோவிற்கும் மேல் அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டது. சோற்றால் அலங்கரிக்கப்பட்ட சிவனை காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆரணி ஸ்ரீ அரியாத்தம்மன் கோவில் நவராத்திரி விழா - 10ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

  ஆரணி, அக்.21: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரியாத்தம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் 10-ம் நாளான நேற்று, ஸ்ரீ அரியாத்தம்மன் *ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினி அம்பாள்* அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மகிஷாசூரனை வதம் செய்யும் கோலத்தில், கையில் ஆயுதங்களுடன், சிங்கத்தின் மீது அமர்ந்தபடி அம்பாள் காட்சி அளித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த சிறப்பு அலங்கார தரிசனத்தை காண ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

> 🍋 வாசலில் எலுமிச்சம் பழம் கட்டுவது எதற்காக தெரியுமா?

   

புரட்டாசி 1 - பெருமாள் மாதம் பிறந்தது: வெள்ளிக்கிழமையில் இரட்டிப்பு புண்ணியம்!

*🔴 LIVE • ஆன்மீக செய்திகள் | GOPI 12 NEWS* *புரட்டாசி 1 - பெருமாள் மாதம் பிறந்தது: வெள்ளிக்கிழமையில் இரட்டிப்பு புண்ணியம்!* சென்னை, செப்.18: தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படும்  புரட்டாசி மாதம் இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை பிறந்தது.  பராபவ வருடம் புரட்டாசி 1-ம் நாள் வெள்ளிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.  *இன்றைய சிறப்பு:* இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி வழிபாடும், புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் வழிபாடும் சேர்ந்து இரட்டிப்பு பலனை தரும் நாள். இன்று முதல் அக்டோபர் 17 வரை புரட்டாசி மாதம் நீடிக்கிறது.  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவிடந்தை, திருநீர்மலை உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், துளசி அர்ச்சனை நடைபெறுகிறது. பக்தர்கள் இன்று மாலை 4.45 முதல் 5.45 வரை வீட்டில் விளக்கேற்றி, துளசி சமர்ப்பித்து "ஓம் நமோ நாராயணாய, கோவிந்தா கோவிந்தா" என்று கூறி வழிபட செல்வ வளம் பெருகும். நாளை (19-ம் தேதி) முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் தொடங்குகிறது. பக்தர்கள் அசைவம் தவிர்த்து...

சென்னையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - பேகம் சாகிப் தெருவில் பக்தர்கள் திரள்

சென்னை மவுண்ட் ரோடு, பேகம் சாகிப் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வித்தியாசமான அலங்காரத்தில், இரண்டு காளைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி, கையில் சங்கு, சக்கரத்துடன் நான்கு கரங்களுடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். ரதத்தை ஓட்டுபவராக சிறுவன் வேடத்திலும், முன்புறம் அம்மன் சிலையும் வைக்கப்பட்டு கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாலை, மாவிலை தோரணங்கள், வண்ண விளக்குகளால் பந்தல் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பேகம் சாகிப் தெருவில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகரை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சிட்கோ நகர் 7-வது பிளாக்கில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல தொடக்கம்! வில்லிவாக்கம்

 சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 7-வது பிளாக் நண்பர்கள் குழு சார்பில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஸ்ரீ வெற்றி விநாயகர் விழாக்குழு மூலம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. *இடம்:* முருகன் கோயில் அருகில், 7-வது பிளாக், 9-வது மெயின் ரோடு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 49 நிகழ்ச்சி நிரல்: *14.09.2026 திங்கள்:* காலை 5 மணி கணபதி ஹோமம், 9 மணி சிறப்பு பூஜை, மதியம் 12 மணி பிரசாதம், மாலை 6 மணி சிறப்பு பூஜை *15.09.2026 முதல் 18.09.2026 வரை:* தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல், 18-ம் தேதி குத்துவிளக்கு பூஜை *19.09.2026 சனி:* காலை 9 மணி பூஜை, மதியம் 12 மணி சமபந்தி விருந்து, மதியம் 3 மணி சிறுவர் விளையாட்டு போட்டி, மாலை 6 மணி பரிசு வழங்குதல், மாலை 7 மணி வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் திருவீதி உலா *20.09.2026 ஞாயிறு:* காலை 9 மணி பூஜை, காலை 10 மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு விசர்ஜனம் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விநாயகர் அருள் பெறுமாறு 7-வது பிளாக் நண்பர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் திருப்பதி திருமலை திருக்கொடை விழா கோலாகலம்!

 சென்னை, வில்லிவாக்கம் - செப் 15: சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை திருப்பதி திருமலை திருக்கொடை விழா மிக சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணி முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவின் முக்கிய அம்சமாக திருமலை வெங்கடாசலபதியின் திருக்கொடை தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாநகர், கொளத்தூர், பாடி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக இங்கேயே திருமலை தரிசனம் கிடைக்கும் வகையில் இந்த திருக்கொடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. *Gopi 12 News-க்காக வில்லிவாக்க...

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நகரில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

 சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள், அன்னதானம் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இதுவே மிகப்பெரிய விநாயகர் சிலை என பொதுமக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

🛕 வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறுகிறது. நிகழும் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (10.09.2026) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில், பாலியம்மன் கோயில் வழியாக சிட்கோ நகர், பாடி மேம்பாலம் கீழ் பகுதியில் வந்தடையும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. *இடம்: வில்லிவாக்கம், சென்னை* நேரம்: இன்று காலை 10:00 மணி

சென்னை பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்

  சென்னை பாடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்ததும், பாடல் பெற்ற தலமுமான அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் (திருவலிதாயம்) இன்று பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தொண்டை நாட்டு திருத்தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் நந்தி பகவானுக்கும், மூலவர் திருவல்லீஸ்வரருக்கும் பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு வில்வ இலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாடி, அம்பத்தூர், முகப்பேர், ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். *தல சிறப்பு:* வலியன் என்ற பறவை வழிபட்ட தலம் என்பதால் திருவலிதாயம் என்று பெயர் பெற்றது. இங்கு பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! பெண்கள் கோலாட்ட நடனம்

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் நேற்று இரவு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். குட்டி கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. வண்ண பலூன்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் தொட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இரவு முழுவதும் நடைபெற்ற இந்த பக்தி கொண்டாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். *இடம்: சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகர்* *Reporter: Gopi 12 News*