சென்னை, செப் 22, 2026 தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று (செப். 21) மாலை சென்னையில் திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை அம்பத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் காலையில் வெயிலில் வாடிய மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தாலும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.