முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வீடியோக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் போது, வீட்டின் மாடியில் ஒரு குடும்பம் தவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது

  *நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் போது, வீட்டின் மாடியில் ஒரு குடும்பம் தவிக்கும்   வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.*

பேருந்து விபத்து வீடியோ காட்சி

 *கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் திடீரென குறுக்கே வந்த ஸ்கூட்டர் மீது மோதாமல் இருக்க திரும்பிய சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம் - அதிர்ச்சி காட்சிகள்* *பேருந்தில் பயணித்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்*

வைரல் வீடியோக்கள்

  *🛡️இது நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது...* இயற்கை *சீற்றத்தின்போது, ​​இறுதியில் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட யாருக்குத்தான் நேரம் இருக்கிறது!* *இந்தப் பேரிடரில் சிக்கியுள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்.*

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழா

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, அலகு குத்தி, தீ மிதித்து தங்கள் நேர்திக்கடனை செலுத்தினர். "அம்மா தாயே" என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டின. கோவில் வளாகம் முழுவதும் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

வைரல் வீடியோ காட்சி தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய் - பரபரப்பு

  பாட்டியாலா: வாடகைக்கு வீடு பார்க சென்ற தம்பதியை பிட்புல் இன நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அங்கித் சபர்வாலுக்கு உடலின் பல இடங்களில் தையல் போடப்பட்டுள்ளது. அவரது மனைவியின் கைகள் மற்றும் கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான நாய்களை தடை செய்ய வேண்டும் என இணையத்தில் குரல்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் "கேட்டை திறந்தது அவர்களுடைய தவறு, நாய் மீது குற்றம் இல்லை" என நாய்கள் ஆதரவாளர்கள் பதிலளித்துள்ளனர்.

வில்லிவாக்கம் ஸ்ரீ தேவி பாலியம்மன் கோவிலில் காப்புக் கட்டி பம்பை மேளங்கள் வாசிக்கும் வீடியோ காட்சி ஆடி மாத திருவிழா - பக்தர்கள் கூட்டம்

  வில்லிவாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பாலியம்மன் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீ மிதிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு பம்பை மேளங்கள் வாசித்தனர். ஆடி மாத வெள்ளிக் கிழமையை முன்னிட்டு இன்று குடும்பத்துடன் வந்த பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அசாமில் நேரலையின்போது நிகழ்ந்த பரபரப்பு!

அசாமில் நேரலையின்போது நிகழ்ந்த பரபரப்பு!* அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நிலவரத்தை ஆற்றுப் பகுதியில் நேரலையாக சேகரித்துக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி ஆற்று வெள்ளத்தில் விழுந்தார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக உதவி செய்து அவரை பத்திரமாக மீட்டனர்.

செல்பி எடுக்க சென்ற வாலிபர் அருவியில் சிக்கல்! ஆடைகளை கயிறாக்கி உயிர் காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்

https://www.instagram.com/reel/DbzntmjxWn3/?igsh=MXd3OW95aG5mbnMzYQ==  *மகாராஷ்டிரா:* மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான காளு அருவியில் செல்பி எடுக்க சென்ற வாலிபர் ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலிபர் கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கு விளிம்பில் உள்ள பாறையை பற்றிக் கொண்டு தொங்கினார். உடனடியாக மீட்பு உபகரணங்கள் இல்லாத நிலையில், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் சுதாரித்தனர். அவர்கள் தங்களது துப்பட்டா, ஸ்கார்ஃப் மற்றும் ஆடைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தற்காலிக கயிறாக மாற்றினர். பின்னர் அனைவரும் ஒருங்கிணைந்து அந்த ஆடைக் கயிற்றின் உதவியுடன் வாலிபரை ஆபத்தான பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர். இந்த திக் திக் மீட்பு காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் உடனடி செயல் மற்றும் மனிதாபிமானத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். *விவரம்:* - *இடம்:* காளு அருவி, மகாராஷ்டிரா - *காரணம்:* செல்பி எடுக்க சென்ற போது விபத்து - *மீட்பு:* சுற்றுலாப் பயணிகள் ஆடைகளை கயிறாக்கி மீட்பு

சென்னை ECR-ல குதிரையில் வந்த Zomato டெலிவரி! வைரலாகும் வீடியோ

சென்னை: ECR பாலவாக்கம் பகுதியில் ஒரு இளைஞர், Zomato நிறுவனத்தின் உணவு விநியோகப் பையுடன் குதிரையில் அமர்ந்து உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. பொதுவாக பைக் அல்லது ஸ்கூட்டரில் டெலிவரி செய்யும் நிலையில், இந்த இளைஞர் குதிரையில் சென்று உணவு வழங்கிய காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "Creativity Level 100", "சென்னை தான் வேற லெவல்" என கமெண்ட் செய்து வருகின்றனர். டிராபிக் நெரிசலில் கூட வேகமாக செல்ல இப்படி ஒரு ஐடியாவா என பலரும் வியந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது Instagram, Facebook, WhatsApp ஆகியவற்றில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

வீடியோ காட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான வைரல் வீடியோ

  *பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும் போது கவனம்! விபத்தை தடுக்க முக்கிய அறிவுறுத்தல்* பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி பேருந்தில் இருந்து ஒரு சிறுவன் இறங்கிய உடன், பேருந்தின் பின்புறம் வழியாக சாலையை கடக்க முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று வேகமாக வருகிறது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கரூரில் முதல்வர் அவர்கள் பணம் முக்கியமா ஜனம் முக்கியமா என்று பேசிய வைரல் வீடியோ காட்சி

  கரூரில் தமிழக முதல்வர் அவர்கள் பணமா  ஜனமா என்று கேட்டாள் எனக்கு ஜனகதான் முக்கியம் என்று சொன்ன தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் பேசிய வைரல் வீடியோ காட்சி