முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

🚨BREAKING NEWS லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

ஆரணி சேவூரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா -

  ஆரணி, நவ.20:* ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி வடக்கு ஒன்றியம் சேவூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நூதன குடக்கரை ராஜகோபுர மஹா கும்பாபிஷேக (சம்ப்ரோக்ஷண) விழா இன்று (20.11.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் திருமிகு *சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA* அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் மற்றும் விழா குழுவினர், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு (வயது 75) உடல்நலக் குறைவால் காலமானார். 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவக் குழுவினர் பல்வேறு சிகிச்சைகளை வழங்கியும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், இன்று 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் என MGM மருத்துவமனை சார்பில் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நம்ம ஊர் மீடியா சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

திருமணியில் கந்தசஷ்டி விழா: வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை!

 திருமணி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனவே பொது மக்கள், பக்தர்கள், அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா: அம்மனிடம் சக்திவேல் பெற்ற முருகன் - பக்தர்கள் பரவசம்!

  வில்லிவாக்கம், நவ. 15: வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று முழக்கமிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.  E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா, வில்லிவாக்கம்

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை: ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

*வில்லிவாக்கம், நவ. 11:* சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (11/11/2026, புதன்கிழமை) முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப் பெருமானுக்கு அழகிய ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என முழக்கமிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பக்தர்கள் அனைவரும் அதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்...

ஆரணி கோட்டாட்சியராக கு. சௌமியா பொறுப்பேற்பு!

ஆரணி,  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியராக (RDO) திருமதி கு. சௌமியா இன்று தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். *அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து* புதிய கோட்டாட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மலர்க்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். *பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு* தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர் கு. சௌமியா, ஆரணி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசுத் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைய அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், வருவாய்த் துறை சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்...

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன!

 வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன! வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2026 கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார மஹோற்சவ பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இன்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து, மாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.  தேதி : 09-11-2026, திங்கட்கிழமை 📍 இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi 12 *🙏 ஓம் முருகா! 🙏*

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு - பெரும் சோகம்!

  திருவண்ணாமலை அருகே சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், 4 சிறுமிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் ஏரிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம்ம ஊரு மீடியா சார்பாக ஆழ்ந்த இரங்கல். தேதி : 09-11-2026, திங்கட்கிழமை ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா 

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

 ஆரணி சட்டமன்ற தொகுதி, செய்யார் தெற்கு ஒன்றியம், கொருக்காத்தூர் S.சசிகுமார் அவர்களின் தந்தை C.செல்வராஜ் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா இன்று (09.11.2026) நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், முன்னாள் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் நேரில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் N.வாசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நம்ம ஊரு மீடியா - E.கோபி  செய்தியாளர், சென்னை

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் சாலைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அதிகாலையில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் கிடந்த பட்டாசு கழிவுகள், குப்பைகளை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அகற்றி வருகின்றனர். இதனால் வில்லிவாக்கம் பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது. தூய்மை பணியாளர்களின் இந்த சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். *நம்ம ஊரு மீடியா - E.கோபி செய்தியாளர், சென்னை*

நம்ம ஊர் மீடியா -தீபாவளி வாழ்த்துக்கள்

 *நம்ம ஊரு மீடியா - தீபாவளி வாழ்த்துக்கள்* நம்ம ஊரு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் புது ஒளியையும், புது மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் கொண்டு வரட்டும். இருள் நீங்கி, ஒளி பிறக்கும் இந்த திருநாளில், உங்கள் குடும்பத்தில் என்றும் அன்பும், அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும். E.கோபி செய்தியாளர், சென்னை  *- அன்புடன், நம்ம ஊரு மீடியா*

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

  சென்னை,  அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில், மகாகவி பாரதி நகர் 36-வது வட்ட கழக செயல்வீரர் திரு.அ.ஹரிஹரன் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து பெற்றார். திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், அ.ஹரிஹரனுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, இனிப்பு வழங்கி வாழ்த்தினார். இந்த சந்திப்பின் போது கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். செய்தியாளர் : E.கோபி, சென்னை *www.Gopi12.in | நம்ம ஊர் மீடியா*

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை விமரிசை!

  சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணமல்லூர் இஞ்சிமேடு சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 📍 *இடம்:* இஞ்சிமேடு, பெரணமல்லூர், சேத்துப்பட்டு

தங்கம் விலை உயர்வு - இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

 💰 தங்கம் விலை உயர்வு!* ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,05,280-க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,160-க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றம் இன்றி கிராம் ரூ.205-க்கு விற்பனை. 📍 *இடம்:* சென்னை 📸 *செய்தி:* http://E.Gopi - Reporter 📰 *Villivakkam News*

திருவண்ணாமலைக்கு புறப்பட்ட திருக்குடை - பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!

 வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாலியம்மன் கோவிலில் திருக்குடை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் கூட்டத்தோடு அம்மனின் திருக்குடை திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. இரவு முழுவதும் கோவில் வளாகம் மின் விளக்குகளால் ஜொலித்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருக்குடைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் பூக்குடை எடுத்தும், இளைஞர்கள் மேளம் அடித்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த திருவிழாவின் நேரடி ஒளிபரப்பை நம்ம ஊர் மீடியா YouTube சேனலில் காணலாம்.

இன்று 14 மாவட்டங்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | 02.11.2026

 சென்னை:  தமிழகத்தில் இன்று (02.11.2026) மாலை வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை செய்திகளுக்கு  *நம்ம ஊர் மீடியா - http://www.Gopi12.in*  உடன் இணைந்திருங்கள்.

திரு.வி.க.நகர் MLA பல்லவிக்கு புதிய பொறுப்பு!

 தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்திற்கு (State Wildlife Board) CM விஜய் தலைமையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை திரு.வி.க.நகர் தொகுதி MLA பல்லவி அவர்களுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்த புதிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் MLA பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். > மேலும் வில்லிவாக்கம் தொகுதி செய்திகளுக்கு நம்ம ஊர் மீடியாவுடன் இணைந்திருங்கள்!

சென்னையில் நேற்று இரவு கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் கோயம்பேடு, அம்பத்தூர், கொரட்டூர், அயனாவரம், *வில்லிவாக்கம்*, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. *பள்ளிகளுக்கு விடுமுறை:* கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. *வானிலை எச்சரிக்கை:* மேலும் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. > மேலும் வில்லிவாக்கம் பகுதி செய்திகளுக்கு நம்ம ஊர் மீடியாவுடன் இணைந்திருங்கள்!

கனமழை எதிரொலி:, திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

🔴 BREAKING . www.gopi12.in - நம்ம ஊர் மீடியா சென்னை, நவ.1: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி *சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (02.11.2026) திங்கட்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை* அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், மழைநீர் தேங்கிய பகுதிகளில் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *செய்தி தொகுப்பு: E.கோபி* *GOPI12.in| நம்ம ஊர் மீடியா* *செய்தியாளர் - சென்னை.*

இன்று சென்னை வில்லிவாக்கத்தில் திடீர் கனமழை - பொதுமக்கள் அவதி!

 சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று (நவம்பர் 1) இரவு திடீரென கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வில்லிவாக்கம் பிரதான சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மருந்தகங்கள், கடைகள் முன்பு மழைக்காக பொதுமக்கள் ஒதுங்கி நிற்கும் காட்சியை காண முடிகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இடம்:* வில்லிவாக்கம், சென்னை *படம் & செய்தி:* E.கோபி, நம்ம ஊர் மீடியா  செய்தியாளர்