முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மழை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

இன்று 14 மாவட்டங்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு | 02.11.2026

 சென்னை:  தமிழகத்தில் இன்று (02.11.2026) மாலை வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை செய்திகளுக்கு  *நம்ம ஊர் மீடியா - http://www.Gopi12.in*  உடன் இணைந்திருங்கள்.

சென்னையில் நேற்று இரவு கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் கோயம்பேடு, அம்பத்தூர், கொரட்டூர், அயனாவரம், *வில்லிவாக்கம்*, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. *பள்ளிகளுக்கு விடுமுறை:* கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. *வானிலை எச்சரிக்கை:* மேலும் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. > மேலும் வில்லிவாக்கம் பகுதி செய்திகளுக்கு நம்ம ஊர் மீடியாவுடன் இணைந்திருங்கள்!

கனமழை எதிரொலி:, திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

🔴 BREAKING . www.gopi12.in - நம்ம ஊர் மீடியா சென்னை, நவ.1: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி *சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (02.11.2026) திங்கட்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை* அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்றும், மழைநீர் தேங்கிய பகுதிகளில் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. *செய்தி தொகுப்பு: E.கோபி* *GOPI12.in| நம்ம ஊர் மீடியா* *செய்தியாளர் - சென்னை.*

இன்று சென்னை வில்லிவாக்கத்தில் திடீர் கனமழை - பொதுமக்கள் அவதி!

 சென்னை: சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று (நவம்பர் 1) இரவு திடீரென கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வில்லிவாக்கம் பிரதான சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மருந்தகங்கள், கடைகள் முன்பு மழைக்காக பொதுமக்கள் ஒதுங்கி நிற்கும் காட்சியை காண முடிகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இடம்:* வில்லிவாக்கம், சென்னை *படம் & செய்தி:* E.கோபி, நம்ம ஊர் மீடியா  செய்தியாளர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை

☔ திருவண்ணாமலை மாவட்டத்தில்  கன மழை! இன்று (23.10.2026) பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை!  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தினமும் அன்னதானம் - வில்லிவாக்கத்தில் 3 கோயில்களில் ஏற்பாடு!

 வில்லிவாக்கம், அயனாவரம் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்! வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. *நம்ம ஆதவ் நம்ம வில்லிவாக்கம்* சார்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. *எங்கே, எப்போது?* வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட 3 திருக்கோயில்களில், தினமும் மதியம் 12 மணி முதல் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 1. *வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்* 2. *வில்லிவாக்கம் அருள்மிகு சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில்* 3. *அயனாவரம் ஸ்ரீ பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்* தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் எங்கு எவ்வளவு மழை பதிவு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 சென்னை:* சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற விவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. - சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக *120.3 மி.மீ.,* - நுங்கம்பாக்கத்தில் *107.2 மி.மீ.,* - நந்தனத்தில் *83 மி.மீ.,* - வில்லிவாக்கத்தில் *75.5 மி.மீ.,* - தரமணியில் *95.5 மி.மீ.,* - மாதவரத்தில் *87.5 மி.மீ.,* மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 100 மி.மீ-க்கும் மேல் மழை பதிவாகியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம் - பொதுமக்கள் அவதி

  சென்னை: இராயபுரம் இரயில் நிலையம் நேற்றிரவு சென்னையில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் ராயபுரம் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன. படத்தில் காண்பது போல் ஆட்டோக்கள் கூட தண்ணீரில் மெதுவாக செல்கின்றன. பெண்கள், முதியவர்கள் தண்ணீரில் நனைந்தபடி செல்வதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *இடம்*: சென்னை இராயபுரம் ரயில் நிலையம் *தேதி*: 25.07.2026

சென்னையில் பரவலாக பெய்த லேசான மழை – வெப்பம் தணிந்து மக்களுக்கு நிவாரணம்

சென்னை, ஜூலை 10: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிவாரணமாக அமைந்தது. அண்ணாநகர், அம்பத்தூர், கொளத்தூர், வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பதிவானது. சில இடங்களில் சாரல் மழையாகவும், சில பகுதிகளில் சற்று அதிகமாகவும் மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மழை பெய்ததைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மாலை நேரங்களில் வெளியில் சென்றிருந்த மக்கள் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட்டனர். பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மழையால் இனிமையான வானிலை காணப்பட்டது. இருப்பினும், சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து வழக்கத்தை விட மெதுவாக காணப்பட்டது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணித்தனர். பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது ...

இன்று 8 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

 தமிழ் நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை 🌧️⚠️ தமிழகத்தில்  சென்னை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று 21.06.2026 கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது. இன்று கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் பொதுமக்கள் கவனத்திற்கு: 1. தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும் 2. தாழ்வான பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் 3. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

தமிழ் நாட்டில் நாளை 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

 தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – தமிழ் நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு  சென்னை, ஜூன் 18: தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு, மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் கணிப்பின்படி, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது. மேலும், ஜூன் 19-ஆம் தேதியும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை  தவிர்க்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டின...

சென்னையில் திடிர் மழை

 சென்னையில் திடீர் மழை பெய்தது. சென்னையில் கோயம்பேடு அம்பத்தூர் கொரட்டூர் வில்லிவாக்கம் போன்ற பல பகுதிகளில் இன்று மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் தொடங்கிய வானிலை, பின்னர் மிதமான மழையாக பெய்தது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தாலும், வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.