முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செய்யாறு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவண்ணாமலை மாவட்டம் வெங்கடேசன் பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடவு – தொழிலதிபர் திரு P. பூபதி அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம் வெங்கடேசன் பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடவு – தொழிலதிபர் திரு P. பூபதி  அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா வெங்கடேசன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு P.பூபதி அவர்கள் சென்னையில் EASY WAY LOGISTICS என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது சொந்த ஊர் வெங்கடேசன்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், கிராமம் முழுவதும் சுமார் 500 மரக்கன்றுகளை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கு வெளியே நட்டு வைத்துள்ளார். மேலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இந்தப் பசுமை முயற்சியால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததுடன், அவரது சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

செய்யாறு மேல்சீசமங்கலம் கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்சீசமங்கலம் கிராமத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கிராமத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுக் கொண்டனர். இந்த நிகழ்வில்  திருவண்ணாமலை மாவட்டம்  மேல்சீசமங்கலம்  இணைச் செயலாளர் திரு.M.மதிமாறன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு முகாம் ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தார். போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த முகாமிற்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.