சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
🔴 BREAKING NEWS: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செல்போன் எடுத்து வர தடை!* விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குள் வரும் *செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை* விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் இந்த தடை அமலுக்கு வருகிறது. *தடைக்கான காரணம் என்ன?* கோயிலுக்குள் பக்தர்கள் போட்டோ, வீடியோ, ரீல்ஸ் மற்றும் செல்ஃபி எடுப்பதால் கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *பக்தர்களுக்கான ஏற்பாடு:* - கோயிலில் தெற்கு மற்றும் கிழக்கு வாசல் அருகில் *செல்போன் கவுண்டர்* அமைக்கப்படும். - பக்தர்கள் தங்கள் செல்போனை அங்கு ஒப்படைத்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். - ஒரு செல்போனுக்கு *₹5 கட்டணம்* வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும். - கோயில் நுழைவாயிலில் "செல்போன் பயன்படுத்த தடை - Do not use mobile phones" என்ற அ...