முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இன்றைய பழமொழி

 *நம்ம ஊர் மீடியா -  இன்றைய பழமொழி* 🎙️ > *"விளையும் பயிர் முளையிலே தெரியும்"* *பொருள்:*  ஒருவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அவர்களின் இளமை பருவத்திலேயே அல்லது ஆரம்பத்திலேயே கணிக்க முடியும். சிறு வயதில் காட்டும் திறமையும், ஒழுக்கமும் தான் பெரியவனான பிறகும் தொடரும்! 🌱✨

> 🍋 வாசலில் எலுமிச்சம் பழம் கட்டுவது எதற்காக தெரியுமா?

   

இன்றைய ஆன்மீக சிந்தனை | இன்று நல்லது நடக்கும்!

  இன்றைய ஆன்மீக சிந்தனை | இன்று நல்லது நடக்கும்! | இன்றைய ஆன்மீக சிந்தனை (23-09-2025) கவலையை விடு, கடவுளை நம்பு வாழ்க்கையில் நாம் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும், அந்த துன்பம் நிரந்தரமானது அல்ல. இரவு எவ்வளவு தான் இருட்டாக இருந்தாலும், விடியல் நிச்சயம் வரும் என்பது போல, நம் கஷ்டங்களும் ஒரு நாள் விலகும். நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்து, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து உன் கடமையை செய். பலனை இறைவனிடம் விட்டு விடு. இன்று உனக்கு நிச்சயம் நல்லது நடக்கும். நாம் அடுத்தவர்களுக்கு செய்யும் ஒரு சிறு உதவி கூட, இறைவனுக்கு செய்யும் பூஜைக்கு சமம். எனவே இன்று ஒருவருக்காவது உதவி செய்யுங்கள், இறைவன் உங்களுக்கு துணை இருப்பார். இன்றைய மந்திரம்: > `ஓம் நமோ நாராயணாய!` > இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி நாளை தொடங்குங்கள். *நம்ம ஊர் மீடியா - ஆன்மீகம்*

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை! இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த வானம்

  சென்னை, செப் 22, 2026 தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று (செப். 21) மாலை சென்னையில் திடீரென பலத்த இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.  சென்னை அம்பத்தூர், தாம்பரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அடையார், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.  நேற்று இரவு முழுவதும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் காலையில் வெயிலில் வாடிய மக்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்தாலும், அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவோர் கடும் அவதிக்குள்ளாகினர். 

வில்லிவாக்கம் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கத்தில் கரைப்பு!

  சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று (செப்டம்பர் 20) பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. வில்லிவாக்கம் சிட்கோ நகர் மற்றும் பாரதியார் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நேற்று மாலை 4 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டன. மேளதாளம் முழங்க, டி.ஜே இசைக்கு இளைஞர்கள் நடனமாடியபடி, "கணபதி பப்பா மோரியா, அடுத்த வருஷம் ஜல்தி ஆவ்" என்ற கோஷத்துடன் ஊர்வலம் பட்டினப்பாக்கத்தை அடைந்தது. பட்டினப்பாக்கம் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக கடலில் கரைக்கப்பட்டன. பக்தர்கள் கண்ணீர் மல்க விநாயகருக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த நிகழ்வில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இன்றி விழா அமைதியாக நிறைவடைந்தது. *வில்லிவாக்கம் விநாயகர் சதுர்த்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காண எங்கள் YouTube Channel-ஐ பாருங்கள்.* _Author: Namma Oor Media Team_ _Location: Villivakkam, Chen...

தெரிந்து கொள்வோம்

  ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்? WDP 3A #முதல்எழுத்து: முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும் W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்) Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்) Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்) N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்) WDM 2 #இரண்டாம்எழுத்து: இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும். D - டீசல் இஞ்சின் A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction) C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction) CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction) B - பேட்டரி சக்தி இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின். YG #மூன்றாம்_எழுத்து: மூன்றாம் எழுத்து ரயிலின் ...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

 இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தேதி:19/9/26