முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சென்னை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் V.S.பாபு உடலுக்கு மரியாதை செலுத்திய திரு.விஜய் அவர்கள் - உடலை சுமந்து சென்று இறுதி அஞ்சலி

சென்னை, நவ.20: மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் V.S.பாபு அவர்களின் உடலுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அப்போது அவரது உடலை தானே சுமந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது. மறைந்த V.S.பாபு அவர்களின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வில்லிவாக்கத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - 94வது (அ) வட்ட கழக செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

 வில்லிவாக்கம், நவ.19: வில்லிவாக்கம் மேற்கு பகுதி, 94வது (அ) வட்ட கழக செயலாளர் *KDL. த. குமரைய்யா* அவர்களின் பிறந்தநாள் விழா வில்லிவாக்கத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் *பூங்கா SKM. குமார்* அவர்கள் மற்றும் வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர்  *வில்லிவாக்கம் V.S.D. விசு* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவெக கட்சி கழகத் தலைவர்கள், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு பூமாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். 94வது (அ) வட்ட கழக நிர்வாகிகள் அ.அனித்குமார், சி.தினேஷ்குமார், சே.விக்னேஸ்வரன், கற்பகம், வி.வேக்குமார், பிரவீன், சுரேஷ்குமார், கல்யாணி, ஸ்ரீநாத், பரத், சந்துரு, அரவிந்த்ராம், அரவிந்த், சுரேஷ்ராஜா உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பெண்களுக்கு புடவைகள் மற்றும் பரிசு பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு (வயது 75) உடல்நலக் குறைவால் காலமானார். 2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவக் குழுவினர் பல்வேறு சிகிச்சைகளை வழங்கியும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், இன்று 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் என MGM மருத்துவமனை சார்பில் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு நம்ம ஊர் மீடியா சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

தங்கம் விலை அதிரடி குறைவு! 11 மாதங்களுக்குப் பின் சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிவு

  *சென்னை, நவ.17:* தங்கம் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. நடப்பாண்டில் 2-வது முறையாக தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது, நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து, *ஒரு கிராம் ரூ.12,470-க்கு* விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.560 குறைந்து, *ஒரு சவரன் ரூ.99,760-க்கு* விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 1-ம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.99,520 ஆக இருந்த நிலையில், அதன் பின்னர் 11 மாதங்களுக்குப் பின் தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நகைக் கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. *விலை விவரம்:* தங்கம் விலை குறைவு 1 கிராம் ரூ.12,470 ரூ.70 குறைவு 1 சவரன் (8 கிராம்) ரூ.99,760 ரூ.560 குறைவு *செய்தி: நம்ம ஊர் மீடியா, சென்னை*

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மகாகவி பாரதி நகர் 4-வது பிரதான சாலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் திரு.அர்சல், திரு.தியாகு, திரு.பவன், திரு.செந்தில்குமார், திரு.ஹரிஹரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் - 1000 பக்தர்களுக்கு அன்னதானம், இரவில் திருவீதி

16/11/2026 நேற்று வில்லிவாக்கம் சிட்கோ பகுதி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதனைத் தொடர்ந்து இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. சுவாமி சிக்கோ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!

  சென்னை, நவ. 16: சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம் திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த திருக்காட்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் பெருவிழா - தெய்வ திருமண வைபவம்

 விழா அழைப்பிதழ். வில்லிவாக்கம், நவ. 15: அருள்மிகு ஶ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் பெருவிழா மற்றும் தெய்வ திருமண வைபவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்: 15.11.2026, இன்று மாலை 5.30 மணிக்கு - சூரசம்ஹாரம் பெருவிழா 16.11.2026, நாளை மாலை 6.00 மணிக்கு - தெய்வ திருமண வைபவம் இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை: ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

*வில்லிவாக்கம், நவ. 11:* சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (11/11/2026, புதன்கிழமை) முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப் பெருமானுக்கு அழகிய ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என முழக்கமிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பக்தர்கள் அனைவரும் அதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்...

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன!

 வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன! வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2026 கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார மஹோற்சவ பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இன்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து, மாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.  தேதி : 09-11-2026, திங்கட்கிழமை 📍 இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi 12 *🙏 ஓம் முருகா! 🙏*

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் சாலைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அதிகாலையில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் கிடந்த பட்டாசு கழிவுகள், குப்பைகளை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அகற்றி வருகின்றனர். இதனால் வில்லிவாக்கம் பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது. தூய்மை பணியாளர்களின் இந்த சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். *நம்ம ஊரு மீடியா - E.கோபி செய்தியாளர், சென்னை*

தங்கம் விலை உயர்வு - இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

 💰 தங்கம் விலை உயர்வு!* ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 உயர்வு. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,05,280-க்கு விற்பனை. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,160-க்கு விற்பனை. வெள்ளி விலை மாற்றம் இன்றி கிராம் ரூ.205-க்கு விற்பனை. 📍 *இடம்:* சென்னை 📸 *செய்தி:* http://E.Gopi - Reporter 📰 *Villivakkam News*

திரு.வி.க.நகர் MLA பல்லவிக்கு புதிய பொறுப்பு!

 தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்திற்கு (State Wildlife Board) CM விஜய் தலைமையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை திரு.வி.க.நகர் தொகுதி MLA பல்லவி அவர்களுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இந்த புதிய குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் MLA பல்லவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். > மேலும் வில்லிவாக்கம் தொகுதி செய்திகளுக்கு நம்ம ஊர் மீடியாவுடன் இணைந்திருங்கள்!

சென்னையில் நேற்று இரவு கனமழை: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

 சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் கோயம்பேடு, அம்பத்தூர், கொரட்டூர், அயனாவரம், *வில்லிவாக்கம்*, பெரம்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. *பள்ளிகளுக்கு விடுமுறை:* கனமழை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. *வானிலை எச்சரிக்கை:* மேலும் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. > மேலும் வில்லிவாக்கம் பகுதி செய்திகளுக்கு நம்ம ஊர் மீடியாவுடன் இணைந்திருங்கள்!

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

பெரம்பூர், நவ.01-* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கறிவிருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை வடக்கு மாவட்டம், பெரம்பூர் மேற்கு பகுதி, 36-வது மத்திய வட்டக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த விழா *இன்று 01.11.2026 காலை 11.00 மணிக்கு, MKB நகர் விநாயகர் கோவில் அருகில்* நடைபெற்றது. இவ்விழாவிற்கு *36-வது மத்திய வட்டக் கழக செயலாளர் லயன் G.குமார் தலைமை தாங்குகினார். *டாக்டர் C.B.மூவேந்தன் B.Tech., BL., MBA., M.Phil., Ph.D.,* அவர்கள் கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் - மாவட்ட பொறுப்பாளர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் N.M.பாஸ்கரன், E.லட்சுமி நாராயணன், S.M.மாரிமுத்து, D.V.K.செந்தில்குமார், M.N.சீனிவாச பாலாஜி உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, வட்டக் கழக மற்றும் பிற அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். *நம்ம ஊர் மீடியா செய்திக்காக: E.கோபி, செய்தியாளர் - வில்லிவாக்கம் / பெரம்பூர்* *gopi...

சென்னையில் கடும் கடல் சீற்றம் வீடியோ

*சென்னையில் கடும் கடல் சீற்றம்* அர்னாப் அதி தீவிரப்புயல் ஆந்திர மாநிலம் அமலாபுரத்திற்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் மையம்.. புயல் கரையை நெருங்கி வருவதால் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் கடும் கடல் சீற்றம். தற்போது எண்ணூர் பாரதிநகர் பகுதிகளில் ஏற்பட்ட கடும் கடல் சீற்றம். பொதுமக்கள், மீனவர்களை இதன் காரணமாகவே கடலில் இறங்க வேண்டாம் என நாம் தொடர்ந்து அறிவுறுத்திருந்தோம்.

சென்னை சென்ட்ரல் அருகில் தினமும் மதியம் 12 மணிக்கு இலவச அன்னதானம்!

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வெளியே, ஜி ஸ்கொயர் குழுமத்தின் சார்பில் *"பசியற்ற புன்னகை - Serving Everyone, Caring Always"* என்ற பெயரில் தினமும் மதியம் 12 மணி அளவில் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், வேலை தேடி வரும் பொதுமக்கள் என அனைவரும் இந்த அன்னதானத்தில் பயன்பெற்று வருகின்றனர். இடம்: சென்னை சென்ட்ரல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வெளியே நேரம்: தினமும் மதியம் 12:00 மணி வழங்குபவர்: ஜி ஸ்கொயர் குழுமம் - G SQUARE GROUP பசியோடு இருப்பவர்களுக்கு இந்த தகவலை பகிர்ந்து உதவுங்கள்! நன்றியுடன், செய்தியாளர் E.கோபி சென்னை.

தினமும் அன்னதானம் - வில்லிவாக்கத்தில் 3 கோயில்களில் ஏற்பாடு!

 வில்லிவாக்கம், அயனாவரம் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்! வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. *நம்ம ஆதவ் நம்ம வில்லிவாக்கம்* சார்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. *எங்கே, எப்போது?* வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட 3 திருக்கோயில்களில், தினமும் மதியம் 12 மணி முதல் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 1. *வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்* 2. *வில்லிவாக்கம் அருள்மிகு சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில்* 3. *அயனாவரம் ஸ்ரீ பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்* தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையில் எங்கு எவ்வளவு மழை பதிவு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 சென்னை:* சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற விவரத்தை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. - சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக *120.3 மி.மீ.,* - நுங்கம்பாக்கத்தில் *107.2 மி.மீ.,* - நந்தனத்தில் *83 மி.மீ.,* - வில்லிவாக்கத்தில் *75.5 மி.மீ.,* - தரமணியில் *95.5 மி.மீ.,* - மாதவரத்தில் *87.5 மி.மீ.,* மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 100 மி.மீ-க்கும் மேல் மழை பதிவாகியுள்ளதால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.