முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ரயில் 🚆 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தே பாரத் ரயிலில் வேகமாக கொண்டு செல்லப்பட்ட இதயம்! 2 மணி நேரத்தில் உயிர் காப்பு

  வந்தே பாரத் அதிவேக ரயில் மீண்டும் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அகமதாபாத் நகரத்திற்கு தானம் கொடுக்கப்பட்ட இதயம் மற்றும் முக்கிய உறுப்புகளை வந்தே பாரத் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட உறுப்புகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்திய ரயில்வேயின் இந்த வேகமான நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது. தொழில்நுட்பம் மனித உயிரை காப்பாற்ற பயன்படுவது மகிழ்சி அளிக்கிறது. #GOPI12NEWS*

தாம்பரம் ரயிலில் பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு - தவறி விழுந்து படுகாயம்

  *சென்னை, ஜூலை 28* தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பெண் காவல் அதிகாரியிடம் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறித்த நபரை பிடிக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண் காவலர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பார்த பொதுமக்கள் செல்போனை பறித்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வடமாநில இளைஞரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம் - பொதுமக்கள் அவதி

  சென்னை: இராயபுரம் இரயில் நிலையம் நேற்றிரவு சென்னையில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் ராயபுரம் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன. படத்தில் காண்பது போல் ஆட்டோக்கள் கூட தண்ணீரில் மெதுவாக செல்கின்றன. பெண்கள், முதியவர்கள் தண்ணீரில் நனைந்தபடி செல்வதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *இடம்*: சென்னை இராயபுரம் ரயில் நிலையம் *தேதி*: 25.07.2026

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 தொடக்கம் - PM Modi ஜிந்த்-ல் தொடங்கி வைக்கிறார்

  இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் தொடக்கம் - பெரம்பூர் ஐ.சி.எஃப்-ல் வடிவமைப்பு சென்னை: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஜூலை 17-ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் தொடங்கி வைக்கிறார். ஹைட்ரஜன் ரயிலின் சிறப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாசு இல்லாத பயணத்தை வழங்கும் வகையிலும் இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசல் பயன்பாடு குறைந்து, இந்திய ரயில்வேயில் புதிய யுகம் தொடங்கவுள்ளது. சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எஃப், இந்த ரயிலை முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்கப்படுகிறது. ஜிந்த் நகரில் தொடக்க விழா ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின் ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெர...

Rail One செயலி மூலம் Unreserved டிக்கெட்: ஸ்கிரீன்ஷாட் செல்லாது - ரயில்வே எச்சரிக்கை

  09 JUL 2026, சென்னை பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட Rail One செயலி மூலம் பதிவு செய்யப்படும் Unreserved டிக்கெட்டுகள் குறித்து இந்திய ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Rail One செயலி மூலம் Book Tickets செய்து பெறப்படும் Unreserved டிக்கெட்டுகளை பயணிகள் நேரடியாக செயலியில் திறந்து காட்டினால் மட்டுமே செல்லுபடியாகும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் அந்த டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF கோப்பு, WhatsApp-ல் Forward செய்யப்பட்ட படங்கள் ஆகியவை செல்லாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது. இதுபோன்று விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. டிக்கெட் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். எனவே பயணிகள் பயணத்தின் போது Rail One செயலியை நேரடியாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ரயில் டிக்கெட் இல்லையா? ரூ.500 வரை அபராதம்

 ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூ.500 அபராதம் – ஜூலை 1 முதல் அமல் இந்திய ரயில்வே நிர்வாகம், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது ரூ.250 ஆக உள்ள அபராதம், ஜூலை 1 முதல் ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது. மேலும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தல், அபராதத் தொகை செலுத்தாதது மற்றும் டிக்கெட் விதிமுறைகளை மீறுவது போன்ற நடவடிக்கைகள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் அனைவரும் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை பின்பற்றி அபராதத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையில் கால தாமதம்

இன்று  16/6/2026 முதல் 26/6/2026 வரை ரயில் சேவைகள் மாற்றம் சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவைகள் தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை இயக்கத்தில் ரயில் நேர மாற்றம் மற்றும் ரத்து செய்யப்படுதல் போன்ற பல மாற்றங்கள் தற்காலிகமாக  வந்து உள்ளது. ரயில் பாதை பராமரிப்பு காரணமாக திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் சில ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.இதனால் ரயில் பயணிகள் தங்களுடைய ரயில் பயணம் மற்றும் ரயில் நேரத்தைக் சரிபார்ப்பு செய்து ரயிலில் தாங்கள் பயணம் செய்யலாம் .