தி மலை மேல்சிசமங்கலத்தில் தவெக கட்சியினர் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

 



திருவண்ணாமலை:  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், கேக் வெட்டி கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்சிசமங்கலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர்.தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் திரு.கே.வெங்கடேஷ் குமார் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.எம்.மதிமாறன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந் நிகழ்ச்சியில் தவெக கழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திரு எழில், ராஜசேகர், கேசவேல், ஏழுமலை, பிரகாஷ், தமிழ்வாணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று, இனிப்புகளை பெற்றுச் சென்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Post a Comment

0 Comments