முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருவள்ளூர் மாவட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

*OP சீட்டு இனி மொபைலில்! அரசு மருத்துவமனைகளில் QR Code வசதி அறிமுகம் -

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைக்கான OP சீட்டு பெறும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், QR Code மூலம் மொபைலிலேயே OP சீட்டு பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. மருத்துவமனை வளாகத்தில் உள்ள QR Code-ஐ மொபைலில் Scan செய்தால் போதும், உடனடியாக OP சீட்டு Digital ஆக கிடைத்துவிடும். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் OP சீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய செயலி விரைவில் அறிமுகமாகும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணையதளம் வாயிலாக OP சீட்டு பெறும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இந்த QR கோடு சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.

அம்மோனியா வாயு கசிவு உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி

 திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவு: உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .2 லட்சம் நிவாரண உதவி  திருவள்ளூர், ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் தமிழக முதல்வர் அவர்கள்  மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டுள்ளார், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அம்மோனியா வாயு கசிவு 2 பேர் பலி. 5 பேர் கவலைக்கிடம்

 அம்மோனியா வாயு கசிவு - 2 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்* 🚨😔 சென்னை திருவள்ளூர் தொழிற்சாலை  அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 8 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி இதில் 5 பேர் கவலைக்கிடம் , 2 பேர் உயிரிழப்பு .என அமைச்சர் திரு.அருண் ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். உடன் அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் உடன் இருந்தார். மேலும் இது பற்றிய தகவல்கள் அமைச்சர் திரு.அருண்ராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஷத்தன்மை கொண்ட ரசாயனங்களை பயன்படுத்தும் ஆலைகளில் தொடர் ஆய்வு நடத்தப்படும் என உறுதி அளித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  1 பெண் உயிரிழப்பு.மேலும் 46 தொழிலாளர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும்  தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பல தொழிலாளர்கள் உடல் நலம் பாதிப்புக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவைத் தொடர்ந்து பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் இரவு பணிகளை  முடித்து விட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த பல பேரும் இதனால் பாதிக்கப்பட்டு  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும்...

40 மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாய் மூக்கில் ரத்தம்.

  பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 2  தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை . திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இறால் தொழிற்சாலை  செயல்பட்டுவருகிறது அங்கு இன்று காலையில் திடீரென்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் சுமார்  40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு  வாய் மூக்கு  ரத்தம்  வாந்தி மயக்கத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொழிற்சாலையில் வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிற்சாலையில் பரபரப்பு நிலவியது.உடனே  தகவலறிந்த மீட்புப் வந்த படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பான சம்பவத்தின் காரணத்தை கண்டறிய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் அரக்கோணத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் தொழிற்சாலையில் ஆய்வு நடத்தப்பட்டு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தொடர்ந...