முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வில்லிவாக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கத்தில் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் - 94வது (அ) வட்ட கழக செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

 வில்லிவாக்கம், நவ.19: வில்லிவாக்கம் மேற்கு பகுதி, 94வது (அ) வட்ட கழக செயலாளர் *KDL. த. குமரைய்யா* அவர்களின் பிறந்தநாள் விழா வில்லிவாக்கத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை மத்திய மாவட்ட கழக செயலாளர் *பூங்கா SKM. குமார்* அவர்கள் மற்றும் வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர்  *வில்லிவாக்கம் V.S.D. விசு* அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் இந்த பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தவெக கட்சி கழகத் தலைவர்கள், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் நாயகருக்கு பூமாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். 94வது (அ) வட்ட கழக நிர்வாகிகள் அ.அனித்குமார், சி.தினேஷ்குமார், சே.விக்னேஸ்வரன், கற்பகம், வி.வேக்குமார், பிரவீன், சுரேஷ்குமார், கல்யாணி, ஸ்ரீநாத், பரத், சந்துரு, அரவிந்த்ராம், அரவிந்த், சுரேஷ்ராஜா உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் பெண்களுக்கு புடவைகள் மற்றும் பரிசு பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் - 1000 பக்தர்களுக்கு அன்னதானம், இரவில் திருவீதி

16/11/2026 நேற்று வில்லிவாக்கம் சிட்கோ பகுதி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதனைத் தொடர்ந்து இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. சுவாமி சிக்கோ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!

  சென்னை, நவ. 16: சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம் திருவிழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த திருக்காட்சியை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் பெருவிழா - தெய்வ திருமண வைபவம்

 விழா அழைப்பிதழ். வில்லிவாக்கம், நவ. 15: அருள்மிகு ஶ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் பெருவிழா மற்றும் தெய்வ திருமண வைபவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்: 15.11.2026, இன்று மாலை 5.30 மணிக்கு - சூரசம்ஹாரம் பெருவிழா 16.11.2026, நாளை மாலை 6.00 மணிக்கு - தெய்வ திருமண வைபவம் இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா: அம்மனிடம் சக்திவேல் பெற்ற முருகன் - பக்தர்கள் பரவசம்!

  வில்லிவாக்கம், நவ. 15: வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று முழக்கமிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.  E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா, வில்லிவாக்கம்

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை: ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

*வில்லிவாக்கம், நவ. 11:* சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (11/11/2026, புதன்கிழமை) முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப் பெருமானுக்கு அழகிய ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என முழக்கமிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பக்தர்கள் அனைவரும் அதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்...

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன!

 வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன! வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2026 கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார மஹோற்சவ பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இன்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து, மாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.  தேதி : 09-11-2026, திங்கட்கிழமை 📍 இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi 12 *🙏 ஓம் முருகா! 🙏*

திருவண்ணாமலைக்கு புறப்பட்ட திருக்குடை - பக்தர்கள் கூட்டம் அலைமோதியது!

 வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாலியம்மன் கோவிலில் திருக்குடை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் கூட்டத்தோடு அம்மனின் திருக்குடை திருவண்ணாமலைக்கு புறப்பட்டது. இரவு முழுவதும் கோவில் வளாகம் மின் விளக்குகளால் ஜொலித்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருக்குடைகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெண்கள் பூக்குடை எடுத்தும், இளைஞர்கள் மேளம் அடித்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த திருவிழாவின் நேரடி ஒளிபரப்பை நம்ம ஊர் மீடியா YouTube சேனலில் காணலாம்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ‘வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்’ நடைபெற்றது.

 வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ‘வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்’ நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். ‘வடிகால் அமைப்புகளை மேம்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும், மழைக்காலங்களில் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும், ‘பெருநகர சென்னை மாநகராட்சி - குடிநீர் வாரியம் - மின்சார வாரியம்’ ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் பெற்று துரிதமாகத் தீர்வு காணவேண்டும்’ ஆகியவை பற்றிக் கலந்தாலோசித்தோம்.  கட்சி வேறுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கூட்டுப் பொறுப்புடன் செயல்பட்டு மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.

வில்லிவாக்கத்தில் சமுதாய வளைகாப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது!

 சென்னை, வில்லிவாக்கம் (31 அக்டோபர் 2026):* சென்னை மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட *சமுதாய வளைகாப்பு விழா* இன்று (31.10.2026) காலை 11 மணியளவில் சிட்கோ நகர் சமுதாய கூடத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் *திரு. ஆதவ் அர்ஜுனா MLA.,* அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனம் வழங்கி சிறப்புரையாற்றினார். *விழாவின் சிறப்பம்சங்கள்:* இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், கட்சி கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். தாய்மார்களுக்கு அரசின் சார்பில் ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் இந்த சமுதாய வளைகாப்பு திட்டத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் சிற...

தினமும் அன்னதானம் - வில்லிவாக்கத்தில் 3 கோயில்களில் ஏற்பாடு!

 வில்லிவாக்கம், அயனாவரம் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்! வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. *நம்ம ஆதவ் நம்ம வில்லிவாக்கம்* சார்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. *எங்கே, எப்போது?* வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட 3 திருக்கோயில்களில், தினமும் மதியம் 12 மணி முதல் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 1. *வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்* 2. *வில்லிவாக்கம் அருள்மிகு சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில்* 3. *அயனாவரம் ஸ்ரீ பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்* தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர், வாகன ஓட்டிகள் அவதி!

 சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று [20.10.2026] மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வில்லிவாக்கம், அண்ணா நகர், கொளத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 மி.மீ-க்கும் மேல் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக வில்லிவாக்கம் பேருந்து நிலையம், சிட்கோ நகர், பாரதியார் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இன்று இரவு 9 மணிக்கு மேல் கனத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு முழுவதும் 42 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மின்சாதனங்களை கவனமாக கையாளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வில்லிவாக்கத்தில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள் விழா!

 வில்லிவாக்கத்தில் காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள் விழா! சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு வியாபாரிகள் வாழ்வுரிமை முன்னேற்ற பேரவை (TVVMP) சார்பில் மகாத்மா காந்தியின் 157-வது ஜெயந்தி விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு நாள் விழா இன்று (02.10.2026) மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுச்சி வணிகர், மாநில தலைவர் பனம்பொன் இரா.லெனின் தலைமை தாங்கினார்.  இந்நிகழ்ச்சியில் வியாபார பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். *📍 இடம்:* வில்லிவாக்கம், சிட்கோ நகர் சென்னை *📸 படம்:* E.கோபி | நம்ம ஊர் மீடியா

சிட்கோ நகர் 7-வது பிளாக்கில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல தொடக்கம்! வில்லிவாக்கம்

 சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் 7-வது பிளாக் நண்பர்கள் குழு சார்பில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஸ்ரீ வெற்றி விநாயகர் விழாக்குழு மூலம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. *இடம்:* முருகன் கோயில் அருகில், 7-வது பிளாக், 9-வது மெயின் ரோடு, சிட்கோ நகர், வில்லிவாக்கம், சென்னை - 49 நிகழ்ச்சி நிரல்: *14.09.2026 திங்கள்:* காலை 5 மணி கணபதி ஹோமம், 9 மணி சிறப்பு பூஜை, மதியம் 12 மணி பிரசாதம், மாலை 6 மணி சிறப்பு பூஜை *15.09.2026 முதல் 18.09.2026 வரை:* தினமும் காலை 9 மணி மற்றும் மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல், 18-ம் தேதி குத்துவிளக்கு பூஜை *19.09.2026 சனி:* காலை 9 மணி பூஜை, மதியம் 12 மணி சமபந்தி விருந்து, மதியம் 3 மணி சிறுவர் விளையாட்டு போட்டி, மாலை 6 மணி பரிசு வழங்குதல், மாலை 7 மணி வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் திருவீதி உலா *20.09.2026 ஞாயிறு:* காலை 9 மணி பூஜை, காலை 10 மணிக்கு மேல் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு விசர்ஜனம் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விநாயகர் அருள் பெறுமாறு 7-வது பிளாக் நண்பர்கள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் திருப்பதி திருமலை திருக்கொடை விழா கோலாகலம்!

 சென்னை, வில்லிவாக்கம் - செப் 15: சென்னை வில்லிவாக்கத்தில் இன்று காலை திருப்பதி திருமலை திருக்கொடை விழா மிக சிறப்பாகவும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது. இந்த விழாவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. காலை 6 மணி முதலே கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவின் முக்கிய அம்சமாக திருமலை வெங்கடாசலபதியின் திருக்கொடை தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அண்ணாநகர், கொளத்தூர், பாடி, முகப்பேர் ஆகிய பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், "திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்களுக்காக இங்கேயே திருமலை தரிசனம் கிடைக்கும் வகையில் இந்த திருக்கொடை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டிருந்தன. *Gopi 12 News-க்காக வில்லிவாக்க...

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நகரில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

 சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிறப்பு பூஜைகள், அன்னதானம் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இதுவே மிகப்பெரிய விநாயகர் சிலை என பொதுமக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

🛕 வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம்!

சென்னை வில்லிவாக்கத்தில் இன்று ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெறுகிறது. நிகழும் ஸ்ரீ பராபவ வருடம் ஆவணி மாதம் 23ஆம் நாள் (10.09.2026) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோயில், பாலியம்மன் கோயில் வழியாக சிட்கோ நகர், பாடி மேம்பாலம் கீழ் பகுதியில் வந்தடையும். பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவன் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. *இடம்: வில்லிவாக்கம், சென்னை* நேரம்: இன்று காலை 10:00 மணி

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்! பெண்கள் கோலாட்ட நடனம்

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் நேற்று இரவு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். குட்டி கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. வண்ண பலூன்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் தொட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. இரவு முழுவதும் நடைபெற்ற இந்த பக்தி கொண்டாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். *இடம்: சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகர்* *Reporter: Gopi 12 News*

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழா

வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, அலகு குத்தி, தீ மிதித்து தங்கள் நேர்திக்கடனை செலுத்தினர். "அம்மா தாயே" என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டின. கோவில் வளாகம் முழுவதும் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.