ஆரணியில் பிரதோஷ வழிபாடு கோலாகலம்: பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருக்கோவில்களான ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பிரதோஷ வழிபாட்டில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.