முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தமிழ் நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Gopi12 News சார்பாக 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் | ஜெய் ஹிந்த் | வந்தே மாதரம்

  நம் நாட்டின் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  `Gopi12 News` சார்பாக அனைத்து இந்திய மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த சுதந்திர தின  நல்வாழ்த்துக்கள். தியாகிகளின் அர்பணிப்பை நினைவுகூர்வோம். ஒற்றுமையுடன் வளரும் பாரதத்தை உருவாக்குவோம். விடுதலை வேண்டி போராடிய மாவீரர்களை போற்றுவோம் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி தந்த மாவீரர்களை வணங்குவோம். `Gopi12 News` சார்பாக 79-வது சுதந்திர தின வாழ்த்துக்கள் 🙏 தமிழ் வாழ்க! பாரதம் வாழ்க! 🇮🇳 ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்!* 🇮🇳

ஆரணியில் தவெக நிர்வாகி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி:  நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சனிக்கிழமை 80-வது சுதந்திர கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் TVK சார்பில் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் A.S.தண்டபாணி பையூர் அவர்கள் தனது வாழ்த்து செய்தியை "வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்! 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் UPI, GPay நிறுத்தம்

 தமிழகத்தில்  உள்ள பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay உள்ளிட்ட Alternate பரிவர்தனைகளை நிறுத்த பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.மணி மியூல் மோசடி தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் வணிகர்களும் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவினில் புதிய அறிமுகம்! 20 ரூபாய்க்கு 'மில்க் ரஸ்க்' விற்பனை

  மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் தற்போது புதிய பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. பால், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பாக், மில்க் பிஸ்கட் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் ஆவின், தற்போது ரஸ்க் விற்பனையிலும் களமிறங்கியுள்ளது. 100 கிராம் எடையுள்ள 'ஆவின் மில்க் ரஸ்க்' பாக்கெட்டின் விலை ₹20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 கிராம் கொண்ட ஆவின் ரஸ்க் 12 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் ஆவினின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்துகளில் செல்போன் ஸ்பீக்கர் ஒலி கூடாது - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

 சென்னை, ஜூலை 28* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போனை ஸ்பீக்கர் ஒலியில் வைத்து Video, Songs, Reels பார்பதால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் இனிமேல் அரசு பேருந்துகளில் கைபேசியை ஸ்பீக்கர் முறையில் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. *என்ன செய்யலாம்?* செல்போன் ஸ்பீக்கருக்கு பதிலாக Earphone அல்லது Headphone பயன்படுத்தி பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு பேருந்துகளிலும் "ஸ்பீக்கர் தடை - Earphone பயன்படுத்தவும்" என்ற ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் இது குறித்து பயணிகளுக்கு அறிவுறுத்துவார்கள். *அமைதியான பயணம் - பாதுகாப்பான பயணம்* என்ற குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தின் பெயர் மாற்றம் - 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம்

  சென்னை:*  தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான *"முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்"* பெயரை மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. *பெயர் மாற்றம் என்ன?* இதுவரை `முதலமைச்சரின் காலை உணவு திட்டம்` என அழைக்கப்பட்டு வந்த இந்த திட்டம், இனி *"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்"* என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக 15.07.2026 தேதியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *திட்ட விரிவாக்கம்:* இதுவரை 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது *6 முதல் 8ம் வகுப்பு வரை* பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. *அரசின் நோக்கம்:* பள்ளி மாணவர்களின் பசியை போக்கி, வருகையை அதிகரிப்பதோடு, கல்வித்தரத்தையும் உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பூக்கள் விலை கணிசமாக உயர்வு: ஒரு கிலோ மல்லிப்பூ 600 ரூபாய்

   16 ஜூலை 2026* ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல ஊர்களில் பூந்தோட்டம் மலர்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோவில் வழிபாடு மற்றும் வீடுகளில் பூஜைக்கு தேவை அதிகரித்ததால் மலர்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விலை உயர்வால் சற்று சிரமம் அடைந்துள்ளனர். *இன்றைய பூக்களின் விலை விவரம்:* - *ஒரு கிலோ குண்டு மல்லிப்பூ* - 600 ரூபாய் - *ஒரு கிலோ சாமந்தி* - 500 ரூபாய் - *ஒரு கிலோ பன்னீர் ரோஜா* - 250 ரூபாய் வழக்கத்தை விட இந்த வாரம் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடி வெள்ளி முடியும் வரை விலை இப்படியே நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

கனிமொழி தடுத்து நிறுத்தம்: தூத்துக்குடியில் போலீசாருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம்

  தூத்துக்குடி, ஜூலை 11:* தூத்துக்குடி மாவட்டம் கட்டாலன்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அழகுமுத்துகோன் நினைவு தினத்தையொட்டி அங்கு மரியாதை செலுத்த வந்த கனிமொழி அவர்களுடன் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக வந்திருந்தனர். இந்த நிலையில், "அமைச்சர்கள் மரியாதை செலுத்திய பிறகு தான் கனிமொழியை அனுமதிக்க முடியும்" என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மற்றும் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசாரின் அனுமதியுடன் கனிமொழி மற்றும் கட்சியினர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. *நாள்:* 11-07-2026 *இடம்:* கட்டாலன்குளம், தூத்துக்குடி

கரூர் செல்லும் வழியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கரூர், ஜூலை 10:  கரூரில் இன்று (10.07.2026) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் நோக்கி பயணம் மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சிராப்பள்ளி - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் பெருந்திரளான மக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகாட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சரின் வருகையையொட்டி சாலைப் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சரின் வருகை காரணமாக கரூர் மாவட்டத்தில் உற்சாகமான சூழல் நிலவியது ...

பெரம்பலூர் பைன் பிட் நிறுவனத்தில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் தொழில் வளர்சியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக இன்று 08.07.2026, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அமைந்துள்ள பைன் பிட் நிட்டிங் அண் கோ நிறுவனத்தின் பொதுப் பயன்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.   இந்த ஆய்வின் போது நிறுவனத்தில் நடைபெறும் உற்பத்தி பணிகள், பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள், தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்பு உருவாக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் நிறுவனம் செயல்பட வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர்.   இடம்: பெரம்ப...

வீட்டிலிருந்தபடியே மருத்துவ முன்பதிவு செய்ய ‘நலம்AI’ வாட்ஸ்அப் சேவை அறிமுகம்

  தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி – வாட்ஸ்அப் மூலம் எளிதாக மருத்துவ அப்பாயின்ட்மெண்ட் பெறலாம் சென்னை, ஜூலை 8: பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ முன்பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM) இணைந்து ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் மருத்துவமனைக்கு நேரில் செல்லாமல், தங்களது செல்போன் மூலமாகவே மருத்துவ ஆலோசனைக்கான முன்பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் இந்த சேவை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் இதனை மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவையை பயன்படுத்துவது எப்படி? * 96192 22999 என்ற எண்ணை மொபைலில் சேமிக்கவும். * வாட்ஸ்அப்பில் “HI” என்று செய்தி அனுப்பவும். * சாட்பாட் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றி மருத்துவ முன்பதிவை மேற்கொள்ளவும். தொடக்க விழா இந்த சேவையை தமிழ்நாடு மருத்துவ...

வணிக சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - ஓட்டல், டீக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

  *சென்னை:* கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இம்மாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டல், டீக்கடை மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. *எவ்வளவு குறைப்பு?* எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 19 கிலோ எடையுடைய வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ₹172.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. *சென்னையில் புதிய விலை:* விலை குறைப்புக்குப் பின், சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் புதிய விலை ₹3,106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி வீடியோ எடுக்க தடை - மீறினால் கடும் நடவடிக்கை

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதியின்றி ரீல்ஸ், வீடியோக்கள் எடுப்பதற்கு சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. சிகிச்சை தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது குற்றம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவமனை வளாகங்களில் அத்துமீறி வீடியோ எடுப்பது, நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் மருத்துவ சேவைகளை பாதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் பல மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை

  *இன்றும், நாளையும் பலத்த மழை -  சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

*OP சீட்டு இனி மொபைலில்! அரசு மருத்துவமனைகளில் QR Code வசதி அறிமுகம் -

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சைக்கான OP சீட்டு பெறும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், QR Code மூலம் மொபைலிலேயே OP சீட்டு பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. மருத்துவமனை வளாகத்தில் உள்ள QR Code-ஐ மொபைலில் Scan செய்தால் போதும், உடனடியாக OP சீட்டு Digital ஆக கிடைத்துவிடும். இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் OP சீட்டுக்கு பயன்படுத்தக்கூடிய செயலி விரைவில் அறிமுகமாகும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இணையதளம் வாயிலாக OP சீட்டு பெறும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் இந்த QR கோடு சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.

கத்தார் தொழிற்பேட்டை தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு - குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

 கத்தார் தொழிற்பேட்டை தீ விபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு -  குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள்  கத்தார் நாட்டில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்தார்

பயிர்க்கடன் தள்ளுபடி: ₹5,932 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு

 பயிர்க்கடன் தள்ளுபடி: ₹5,932 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான  அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ₹5,932.23 கோடி அளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ₹75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் சிறு மற்றும் குறைந்த நிலப்பரப்பு கொண்ட விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🚨 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 1091 உதவி எண் அறிமுகம்

  சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 1091 உதவி எண் அறிமுகம் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் "சிங்கப்பெண்" சிறப்பு அதிரடிப்படையின் சேவையை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் 1091 என்ற பிரத்யேக உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அவசர சூழ்நிலைகள், தொல்லைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான புகார்களை உடனடியாக தெரிவிக்க இந்த உதவி எண் பயன்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. 1091 என்ற எண்ணை தொடர்புகொள்வதன் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் உதவியை நேரடியாக பெறலாம். அவசர கால உதவி எண்ணான 112 உடன் இணைந்து இந்த சேவையும் செயல்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய ஏற்பாடு முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது. பொதுமக்கள் தேவையான நேரங்களில் 1091 உதவி எண்ணை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.