சென்னையில் இன்று மதியம் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு இன்று பொதுமக்களுக்கு இலவச பிரியாணி வழங்கினர்.
சென்னை தம்பு செட்டி தெருவில் உள்ள பிள்ளையார் கோவில் எதிரில், தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அக் கட்சியினர் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவை பெற்றுச் சென்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சமூக நல நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். விழா அமைதியான முறையில் நடைப்பெற்றதுடன் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
0 Comments