அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, ₹1 கோடி மதிப்பில் பிரமாண்ட காத்திருப்பு அறை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
*யாருக்கு இந்த வசதி?*
கோயிலில் ₹100 கட்டண தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்காகவே இந்த சிறப்பு காத்திருப்பு அறை அமைக்கப்படுகிறது. வெயில், மழையில் சிரமப்படாமல் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்கலாம்.
*சிறப்பம்சங்கள் என்ன?*
1. மேற்கூரை வசதி:
தற்போது அறையின் மேற்கூரை அமைக்கும் பணிகள் வேகமாக நடக்கிறது.
2. கொள்ளவு
ஒரே நேரத்தில் சுமார் 2,000 பேர் வரை அமரும் வகையில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது.
3. கூடுதல் வசதிகள்:
குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதிகளுடன் இந்த அறை அமைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆடி மாதம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற விழாக் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அப்போது இந்த காத்திருப்பு அறை பக்தர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments