கலர் அப்பளம் விற்பனைக்கு தடை - உணவு பாதுகாப்புத்துறை அதிரடி | Color Appalam Ban

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை - தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஏன் தடை?

சந்தையில் விற்கப்படும் பல வண்ண அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செயற்கை நிறமிகள் மற்றும் கெமிக்கல்கள் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.

உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

இதனையடுத்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு கலர் அப்பளம் வாங்கி கொடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source: தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை | Date: 16 JULY 2026

Post a Comment

0 Comments