முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருமணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

திருமணியில் கந்தசஷ்டி விழா: வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை!

 திருமணி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனவே பொது மக்கள், பக்தர்கள், அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா