ஆரணி அருகே உள்ள வெங்கடேசன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (27.08.2026) மாலை சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன. அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய் பாபாவுக்கு உகந்த வியாழக் கிழமையை முன்னிட்டு, ஆலயத்தில் மாலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆலய நிர்வாகத்தினர் இந்த அன்னதான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ஆலயத்தில் இதுபோன்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.