முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முக்கிய செய்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணிடம் பர்ஸை திருட முயன்ற பெண் கைது: மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணிடம் பர்ஸை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் இருந்த பர்ஸை மற்றொரு பெண் திருட முயன்றுள்ளார். இதனை கவனித்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருட முயன்ற பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கு விவரம்: - *இடம்:* மானாமதுரை புதிய பேருந்து நிலையம், சிவகங்கை மாவட்டம் - *குற்றம்:* பர்ஸ் திருட முயற்சி - *நடவடிக்கை:* பெண் கைது, போலீசார் விசாரணை *தேதி:* 24 ஜூலை 2026 *செய்தியாளர்:* WORLD NEWS 512 சிவகங்கை

கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தோரின் 31 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.07.2026) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கலந்து கொண்டு, கரூரில் கடந்த 27.09.2025 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்கினார். கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனில் அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதாகவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைய தேவையான அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கரூர் செல்லும் வழியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கரூர், ஜூலை 10:  கரூரில் இன்று (10.07.2026) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக கரூர் நோக்கி பயணம் மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சிராப்பள்ளி - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் பெருந்திரளான மக்கள் திரண்டு நின்று முதலமைச்சரை வரவேற்றனர். இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைகாட்டி வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதலமைச்சரின் வருகையையொட்டி சாலைப் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கரூரில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலமைச்சரின் வருகை காரணமாக கரூர் மாவட்டத்தில் உற்சாகமான சூழல் நிலவியது ...

சென்னை மாதவரம் அருகே பயங்கரம்! பூமிக்கடியில் இருந்து கொழுந்துவிட்டு எரிந்த எரிவாயு குழாய்*

  *சென்னை - நேற்று நள்ளிரவு* சென்னை மாதவரம் அருகே பூமிக்கடியில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயு குழாயில் திடீரென ஏற்பட்ட கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. *என்ன நடந்தது? நள்ளிரவு நேரத்தில் மாதவரம் அருகே உள்ள சாலையோரத்தில் பூமிக்கடியில் சென்ற எரிவாயு குழாயில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கசிந்த கேஸ் தீப்பற்றி வானுயர எரிந்தது. படத்தில் உள்ளது போல் தீப்பிழம்புகள் 50 அடி உயரத்திற்கு வானில் எழும்பியது. அடர்ந்த புகையும் வெளியானது.இதை பார்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். *தீயணைப்பு பணி* தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எரிவாயு விநியோகமும் தடை செய்யப்பட்டது.  *சேதம் மற்றும் விசாரணை* இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என தகவல். ஆனால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று தீயில் சேதமடைந்தது. எரிவாயு குழாய் எதனால் உடைந்தது என கேஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் கா...

சென்னையில் பரவலாக பெய்த லேசான மழை – வெப்பம் தணிந்து மக்களுக்கு நிவாரணம்

சென்னை, ஜூலை 10: சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக லேசான மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிவாரணமாக அமைந்தது. அண்ணாநகர், அம்பத்தூர், கொளத்தூர், வேளச்சேரி, அடையாறு, தாம்பரம், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பதிவானது. சில இடங்களில் சாரல் மழையாகவும், சில பகுதிகளில் சற்று அதிகமாகவும் மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். மழை பெய்ததைத் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மாலை நேரங்களில் வெளியில் சென்றிருந்த மக்கள் மற்றும் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து ஓரளவு விடுபட்டனர். பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மழையால் இனிமையான வானிலை காணப்பட்டது. இருப்பினும், சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து வழக்கத்தை விட மெதுவாக காணப்பட்டது. மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணித்தனர். பெரிய அளவிலான பாதிப்புகள் அல்லது ...

தவெக கட்சி சார்பில் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைப்பு - பொதுமக்கள் நன்றி

  திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக கட்சியினர் ஆரணியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து வெளியான செய்திக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரணியில் சேதமடைந்திருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின் விபத்து அச்சத்தில் இருந்து  ஊர் பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் விரைவாக நடைபெற உதவியாக இருந்த  தமிழக வெற்றிக் கழக கட்சியினர் திருவண்ணாமலை  வடக்கு மாவட்ட   ஆரணி தென்கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு JSV சுதன் M.Com அவர்கள்  மற்றும்  தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு AS.தண்டபாணி press பையூர்  அவர்களும் மற்றும்  மின்வாரிய துறை அதிகாரி அவர்களுக்கும் பொது மக்கள் சார்பில் மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதுடெல்லி: தங்களிடம் ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் தற்போதும் அதை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நாடு முழுவதும் உள்ள 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மேலும் ரூ.2,000 நோட்டுகளை தபால் மூலம் அனுப்பினால், குறிப்பிடும் வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும். ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்கது என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டாலும், அவற்றை மாற்றுவதற்கான வசதி தொடர்ந்து வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோவில் புதிய எச்சரிக்கை: உரத்த குரலில் பேசினால் ரூ.500 அபராதம்

  சென்னை:  சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் வசதிக்காக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலில் உரத்த குரலில் பேசுதல் மற்றும் ஸ்பீக்கர் மோடில் அலைபேசியை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹெட்போன் இன்றி இசை அல்லது வீடியோக்களை ஒலிக்கச் செய்வதும் விதிமீறலாக கருதப்படும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் விதிமீறும் பயணிகள் மெட்ரோ வளாகத்திலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் ஹெட்போன்களை பயன்படுத்தவும், உரத்த குரலில் பேசுவதையும் ஸ்பீக்கர் மோட் பயன்பாட்டையும் தவிர்க்குமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் 5 பக்தர்களின் 16 சவரன் நகை திருட்டு

விழுப்புரம்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் கலந்து கொண்ட 5 பக்தர்களிடம் இருந்து 16 சவரன் நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் முடிந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், கோவிலுக்கு வந்திருந்த 5 பக்தர்களின் நகைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 16 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததை பயன்படுத்தி நகை திருட...

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ திட்டம்: குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

புதுடெல்லி: குழந்தைகள் நலனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ‘மிஷன் வாத்சல்யா’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 குழந்தைகள் வரை இந்த உதவியை பெறலாம். இந்த நிதியுதவி தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வருமான சான்றிதழ் முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் ‘ஹனிமூன்’ அலங்காரம்: டி.டி.இ. சஸ்பெண்ட்

  மும்பை:  நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் புதுமண தம்பதிக்காக ஹனிமூன் அலங்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயில் பெட்டியில் பூக்கள், பலூன்கள் மற்றும் வண்ண விளக்குகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் விதிமுறைகளை மீறி அனுமதி அளித்ததாக கூறப்படும் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா ரயில் நிலையத்தில் அனுமதியின்றி நுழைந்து அலங்காரம் செய்த நபர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் கோலாகலமாக இன்று தொடக்கம்

  திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஆனி பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. விழாவையொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் உற்சவர் புறப்பாடு நடைபெற, பக்தர்கள் “அருணாசலா ஹரா ஹரா” என்ற பக்தி முழக்கத்துடன் வழிபட்டனர். ஆனி பிரம்மோற்சவம் பல நாட்கள் நடைபெறவுள்ள நிலையில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் தேரோட்டம் மற்றும் சிறப்பு தீபாராதனைகள் இடம்பெறவுள்ளன. இதற்காக கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளன. திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரம் முழுவதும் பக்தி பரவசம் நிலவி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்து...

ஒரே நாளில் 3வது முறையாக மாற்றம் - சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

 முக்கிய செய்தி ⚡  தேதி: 08.07.2026 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 3வது முறையாக மாற்றம் அடைந்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.560 குறைவு, மாலையில் ரூ.1,040 குறைவு என இருந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.400 உயர்ந்துள்ளது. *இன்றைய தங்கம் விலை நிலவரம்:* 24K தங்கம்  1 கிராம் - ரூ.14,455 10 கிராம் - ரூ.1,44,550 22K தங்கம் 1 கிராம் - ரூ.13,250   1 சவரன் - ரூ.1,06,000 விலை ஏற்ற இறக்கத்தால் நகை வாங்குவோர் குழப்பமடைந்துள்ளனர்.  GoldPrice, ChennaiGold, BreakingNews, WorldNews512

அரபிக்கடலில் விமானம் விழுந்து விபத்து - பாகிஸ்தான் சரக்கு விமானத்தில் 5 பேர் காணாமல் போனார்கள்

தேதி: 08.07.2026 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு புறப்பட்ட பாகிஸ்தான் பதிவெண் கொண்ட சரக்கு விமானம் ஒன்று அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. K2 Airways சரக்கு விமானம் 5 ஊழியர்களுடன் பயணித்தது. கராச்சிக்கு மேற்கே சுமார் 155 நாட்டிக்கல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த சரக்கு விமானம் அரபிக் கடலில் விழுந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தில் இருந்த 5 பேரும் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. News Reporter  - ME.GOPI, WORLD NEWS 512, CHENNAI

தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் இன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  சென்னை, ஜூலை 08: தமிழக முதல்வர் திரு .விஜய் அவர்கள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகளை முதல்வர் விஜய் அவர்கள் கைகளில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. News Reporter  - ME.GOPI, WORLD NEWS 512, CHENNAI -

நாளை முதல் ஆரோக்கியா பால் விலை உயர்வு - அரை லிட்டர் ₹2, 1 லிட்டர் ₹3 கூடுதல்

சென்னை: ஆரோக்கியா பால் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை உயர்தி அறிவித்துள்ளது. இந்த புதிய விலை நாளை முதல் அதாவது 2026 ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. *விலை விவரம்:* அரை லிட்டர் பால் - ₹2 உயர்வு 1 லிட்டர் பால் - ₹3 உயர்வு   அரை லிட்டர் ஆரோக்கியா தயிர் - ₹2 உயர்வு பிற தனியார் பால் நிறுவனங்களும் விரைவில் விலையை உயர்த முடிவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ---

பாகிஸ்தான் சென்ற போயிங் 737 சரக்கு விமானம் மாயம் - 5 பணியாளர்களின் நிலை என்ன

*WORLD NEWS 512 | முக்கிய செய்தி* பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த K2 Airways-க்கு சொந்தமான Boeing 737-400 சரக்கு விமானம் ஒன்று 5 பணியாளர்களுடன் மாயமாகியுள்ளது. *என்ன நடந்தது?* 1. *விமானம்:* பாகிஸ்தான் பதிவு கொண்ட Boeing 737-400 சரக்கு விமானம். விமான எண்: KTA1732 2. *பயணம்:* ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது 3. *நேரம்:* ஜூலை 7, 2026 செவ்வாய்கிழமை இரவு 9:18 மணிக்கு வழிசெலுத்தல் கருவியில் பிரச்சனை என ATC-க்கு தகவல் தெரிவித்தது 4. *மாயமான இடம்:* கராச்சியில் இருந்து 155 nautical miles மேற்கே அரபிக் கடல் பகுதியில் ரேடார் மற்றும் தொடர்பு துண்டிக்கப்பட்டது 5. *கடைசி நிமிடம்:* 1 நிமிடத்தில் 5000 அடி கீழே இறங்கி, பின் 30 வினாடியில் 6000 அடி மேலே சென்று, பிறகு வேகமாக கடலில் விழுந்ததாக Flightradar24 தரவு கூறுகிறது. *தற்போதைய நிலை:* பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் உடனே Rescue Coordination Centre-அ Activate செய்து கடல் மற்றும் வான் வழியாக தேடுதல் பணியை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் கடற்படை கப்பல் PNS Zulfiqar, விமானப்படை விமானங்களும் தேடுதலில் ஈடுபட்டுள...

அலர்ட்! E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன மைலேஜ் 2% முதல் 6% வரை குறையலாம் - வாகன ஆராய்சி சங்கம் தகவல்

  இந்தியா மத்திய அரசு E20 எரிபொருளை படிப்படியாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய வாகன ஆராய்சி சங்கம் வெளியிட்ட தகவலின்படி, E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் 2 முதல் 6% வரை குறைய வாய்புள்ளது. E20 பெட்ரோல் என்பது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகும். இது "Cleaner Fuel" என அழைக்கப்படுகிறது. *புதிய வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை:* E20-க்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட புதிய வாகனங்களில் *எஞ்சின் பாதிப்போ அல்லது செயல்திறன் குறைபாடோ ஏற்படாது* என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனவே பழைய வாகனம் வைத்திருப்பவர்கள் E20 பெட்ரோல் நிரப்பும் முன் மைலேஜ் வித்தியாசத்தை கவனத்தில் கொள்வது நல்லது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளையும் 12-ம் தேதியும் 41 மின்சார ரெயில்கள் ரத்து!*

  *JUST IN 🚨 WORLD NEWS 512 - முக்கிய செய்தி* *சென்னை:* பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *ரத்து விவரம்:* 1. *தேதி:* நாளை மற்றும் ஜூலை 12-ஆம் தேதி 2. *நேரம்:* காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை 3. *எத்தனை ரெயில்:* மொத்தம் *41 மின்சார ரெயில்கள் ரத்து* செய்யப்படுகின்றன. *பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு:* பயணிகளின் வசதிக்காக இந்த நேரத்தில் *சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்* என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். *தேதி:* 04-07-2026 WORLD NEWS 512

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம்

File  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 10-க்கும் மேற்பட்ட அறைகள் சேதம் *செய்தி:*   விருதுநகர், ஜூன் 28: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று அதிகாலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் ஆலையின் 10-க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பட்டாசு ஆலை செயல்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.