முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருவண்ணாமலை மாவட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

ஆரணி சேவூரில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய மஹா கும்பாபிஷேக விழா -

  ஆரணி, நவ.20:* ஆரணி சட்டமன்ற தொகுதி, ஆரணி வடக்கு ஒன்றியம் சேவூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன நூதன குடக்கரை ராஜகோபுர மஹா கும்பாபிஷேக (சம்ப்ரோக்ஷண) விழா இன்று (20.11.2026) வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர் திருமிகு *சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA* அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் மற்றும் விழா குழுவினர், மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணியில் கந்தசஷ்டி விழா: வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை!

 திருமணி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனவே பொது மக்கள், பக்தர்கள், அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு - பெரும் சோகம்!

  திருவண்ணாமலை அருகே சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், 4 சிறுமிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் ஏரிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம்ம ஊரு மீடியா சார்பாக ஆழ்ந்த இரங்கல். தேதி : 09-11-2026, திங்கட்கிழமை ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா 

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

 ஆரணி சட்டமன்ற தொகுதி, செய்யார் தெற்கு ஒன்றியம், கொருக்காத்தூர் S.சசிகுமார் அவர்களின் தந்தை C.செல்வராஜ் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா இன்று (09.11.2026) நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், முன்னாள் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் நேரில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் N.வாசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நம்ம ஊரு மீடியா - E.கோபி  செய்தியாளர், சென்னை

சேத்துப்பட்டு அருகே இஞ்சிமேடு சிவன் கோவிலில் பிரதோஷ பூஜை விமரிசை!

  சேத்துப்பட்டு அருகே உள்ள பெரணமல்லூர் இஞ்சிமேடு சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 📍 *இடம்:* இஞ்சிமேடு, பெரணமல்லூர், சேத்துப்பட்டு

திருமணி மதுர வெங்கடேசன் பட்டி ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜை – பக்தர்கள் திரளாக பங்கேற்பு

ஆரணி அருகே | திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த திருமணி மதுர வெங்கடேசன் பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதையொட்டி ஆலயத்தில் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக பக்தி கதைகள், சாய்பாபா பாடல்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு சாய்பாபா ஆசி இந்த ஆலயத்திற்கு அருகே உள்ள முனுகப்பட்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் வழியில் சாய்பாபா ஆலயத்திற்கு வந்து வழிபட்டு வருகின்றனர். காலையிலேயே ஆலயத்திற்கு வரும் பள்ளி குழந்தைகள் சாய்பாபாவை வணங்கி, அவரது ஆசியைப் பெற்ற பின்னர் பள்ளிக்கு செல்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் சிறப்பு பூஜைகள் நிறைவடைந்ததும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் இனிப்பு, பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் பக்தர்களுக்கு அன்னதான...