சென்னை:* தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கான *"முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்"* பெயரை மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. *பெயர் மாற்றம் என்ன?* இதுவரை `முதலமைச்சரின் காலை உணவு திட்டம்` என அழைக்கப்பட்டு வந்த இந்த திட்டம், இனி *"பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்"* என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக 15.07.2026 தேதியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *திட்ட விரிவாக்கம்:* இதுவரை 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த இந்த திட்டம், தற்போது *6 முதல் 8ம் வகுப்பு வரை* பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. *அரசின் நோக்கம்:* பள்ளி மாணவர்களின் பசியை போக்கி, வருகையை அதிகரிப்பதோடு, கல்வித்தரத்தையும் உயர்த்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
முக்கிய செய்திகள், வைரல் வீடியோக்கள், ஆன்மீகம் அனைத்தும் படியுங்கள்.