போலீஸ் பேரிகார்டு இழுத்துச் சென்று பைக் சாகசம் - 6 மாணவர்கள் கைது

 



*சென்னை:* 

சென்னை அடையாறு, பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாட்டிற்காக போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை பைக்கில் இழுத்துச் சென்று சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், சில இளைஞர்கள் பைக்கில் சென்றபடி சாலையில் வைக்கப்பட்டிருந்த போலீஸ் பேரிகார்டை கையில் இழுத்துச் சென்றுள்ளனர். தீப்பொறி பறக்க பேரிகார்டை இழுத்துச் சென்று அபாயகரமான முறையில் பைக் ஓட்டியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

வீடியோவை வைத்து விசாரணை நடத்திய அடையாறு போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். இதில் 5 பேர் பள்ளி மாணவர்கள், ஒருவர் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்துள்ளது.

விசாரணையில், "ஜாலிக்காகவும், ரீல்ஸ் போடுவதற்காகவும் பேரிகார்டை இழுத்துச் சென்றோம்" என மாணவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்படும் பொருட்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்" என சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்

Post a Comment

0 Comments