வெங்கடேசன் பட்டியில் வியாழன் கிழமை தோறும் நடக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்

 



வெங்கடேசன் பட்டி: ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அன்னதானம்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெங்கடேசன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய் பாபா கோவிலில் தினமும் பூஜைகள் மற்றும் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் இக் கோவிலில் ஶ்ரீ சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பூஜையில் ஏராளமான திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருளைப் பெற்று வழிபட்டு வருகின்றனர். இக் கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு பால், பிஸ்கேட்டுகள் வழங்கப்படுவதுடன், பக்தர்களுக்கு இனிப்புகள், மற்றும் புளியோதரை, எலுமிச்சை சாதம், பிரிஞ்சி சாதம் உள்ளிட்ட அன்னதான உணவுகளும் வாரந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இக்கோவிலை வெங்கடேசன்பட்டியை சேர்ந்த  திரு A.அருள் என்பவர் சிறப்பான முறையில் இக்கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அவருடன்  அவர் குடும்பத்தினர் மற்றும் அவர் உறவினர்களும் இக்கோவில் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

மேலும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் திரு A.அருள் அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் நலமுடன் வாழவும், அவர்கள் மேற்கொள்ளும் இந்த ஆன்மீக சேவை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். மேலும் வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கும் சிறப்பு பூஜைக்காக இக்கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருகின்றனர். சாய்பாபாவிடம் பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

தேதி: 25.06.2026 | வியாழக்கிழமை

WORLD NEWS 512

NEWS REPORTER 

ME.GOPI 

Post a Comment

0 Comments