இன்று (25/6/2026) வெங்கடேசன்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சீரடி சாய் பாபா ஆலயத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெங்கடேசன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய் பாபா ஆலயத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் வியாழக்கிழமை தோறும் மாலை நேரத்தில் நடைபெறும் பூஜையையொட்டி  ஸ்ரீ சீரடி சாய் பாபாவிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஜனைகள், பக்தி பாடல்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் ஆன்மீக கதைகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மீக உரைகளைக் கேட்டு பயனடைகின்றனர்.

மேலும், பக்தர்களின் மன அமைதி, ஒழுக்கம் மற்றும் இறைநம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மீக பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் பக்தர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வியாழக்கிழமை தோறும் பக்தி நிறைந்த சூழலை உருவாக்கி வருகின்றன.

செய்தி: WORLD NEWS 512

செய்தியாளர்: ME.கோபி

📍 வெங்கடேசன்பட்டி, திருவண்ணாமலை மாவட்டம்.