திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
இன்று பவுர்ணமி தினத்தையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்த நிலையில், 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "ஓம் நமசிவாய" என முழக்கமிட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக காவல்துறை, தீயணைப்புத் துறை, மருத்துவக் குழுக்கள் மற்றும் மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், மருத்துவ உதவி மற்றும் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பவுர்ணமி கிரிவலம் காரணமாக திருவண்ணாமலையில் இன்று முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், போக்குவரத்து மாற்றங்களும் அமலில் உள்ளன.
0 Comments