தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் அனுமதியின்றி ரீல்ஸ், வீடியோக்கள் எடுப்பதற்கு சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
சிகிச்சை தொடர்பான காட்சிகளை அனுமதியின்றி பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது குற்றம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோயாளிகளின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவமனை வளாகங்களில் அத்துமீறி வீடியோ எடுப்பது, நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் மருத்துவ சேவைகளை பாதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments