சென்னை பாரிஸ் கார்னர் – லிங்கி செட்டி தெருவில் தொடரும் அன்னதான சேவை
சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள லிங்கி செட்டி தெருவில், அருள்மிகு ஸ்ரீ நடராஜர் கோவில் எதிரே உள்ள ஓரு வீட்டில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு நடைபெறும் இந்த அன்னதான நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.
வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மதியம் 1 மணி நேரத்தில் நடைபெறும் இந்த சேவையில், ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் வழியாக செல்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. தன்னார்வலர் உணவை தயாரித்து, மக்களுக்கு அன்புடன் பரிமாறி வருகின்றனர்.
இந்த அன்னதான சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசியால் இருப்பவர்களுக்கு உணவு வழங்குவது மிகச் சிறந்த தர்மம் என்ற நோக்கத்தில் இந்த சேவை நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
“அன்னதானம் பெரும் தானம்”
என்ற உயரிய கொள்கையை முன்னிறுத்தி, லிங்கி செட்டி தெருவில் நடைபெறும் இந்த மனிதநேய சேவை பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது. 🙏🍛
📍 இடம்:
லிங்கி செட்டி தெரு, பாரிஸ் கார்னர், சென்னை
நாள்:
ஒவ்வொரு சனிக்கிழமையும் மத்திய 1 மணி அளவில்
🍽️ சேவை: பொதுமக்களுக்கு இலவச அன்னதானம்
படம்:
சனிக்கிழமை அன்னதான நிகழ்வில் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்கள்.

0 Comments