வீடியோ பதிவு சென்னையில் இன்று கனமழை பெய்தது




சென்னையில் இன்று மாலையில் திடீரென்று கனமழை பெய்தது. வில்லிவாக்கம்,பாடி லுகாஸ், மற்றும் கொரட்டூர்,அம்பத்தூர் ரியல் எஸ்டேட், ஐசிஎப், அயனாவரம், மற்றும் சுற்றுவட்டார பல பகுதியில் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை  பெய்தது.கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பமான கால நிலைக்கு மத்தியில் இந்த மழை மக்களுக்கு சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments