100 நாள் வேலை இனி 125 நாள்: ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டம் இன்று முதல் அமல்


 

சென்னை: 2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் Viksit Bharat 2047 இலக்கின் ஒரு பகுதியாக, VB-GRAM G Act எனும் புதிய வேலை உறுதித் திட்டம் நாடு முழுவதும் இன்று 01.07.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. வேலை நாட்கள் உயர்வு: இதுவரை கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்ட நிலையில், விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் இனி 125 நாட்கள் வேலை கிடைக்கும்.

2. தினக்கூலி: மேம்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு ₹327 கூலியாக வழங்கப்படும்.

3. தமிழக அரசு ஒப்புதல்: இந்த 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு:

தமிழ்நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ₹12,642 கோடி தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்காக ₹7,585 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பயன்?

கிராமப்புற ஏழை, எளிய மக்கள், விவசாய கூலித் தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாக பயனடைவார்கள். கூடுதலாக 25 நாட்கள் வேலை கிடைப்பதால் ஆண்டு வருமானம் கணிசமாக உயரும்.

Post a Comment

0 Comments