ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முடிவு - டால்கம் பவுடர் வழக்குகளை முடிக்க $5.5 பில்லியன்


 

உலக செய்தி, ஜூலை 28*

உலக புகழ்பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது டால்கம் பவுடர் உள்ளிட்ட தயாரிப்புகள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளது.

சுமார் 69,000 வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர நிறுவனம் $5.5 பில்லியன் அதாவது சுமார் ரூ.52,000 கோடி செலுத்துவதாக அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த மிகப்பெரிய தொகையை செலுத்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

டால்கம் பவுடர் பயன்பாட்டால் புற்றுநோய் ஏற்பட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பெண்கள் இந்த வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

இந்த செட்டில்மெண்ட் மூலம் நீண்ட நாள் சட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments