திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் இரும்பு கம்பி நுழைவாயில் - பக்தர் உயிரிழப்பை தொடர்ந்து நடவடிக்கை


 

*திருவண்ணாமலை, ஜூலை 28*

திருவண்ணாமலை அருள்மிகு இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் முகப்பில் கோயில் நிர்வாகம் சார்பில் இரும்பு கம்பிகளால் ஆன சிறிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்த கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பக்தர்களின் பாதுகாப்பை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கு பிள்ளையார் கோயில் மிகவும் சிறிய நுழைவு வழியை கொண்டது. அதன் வழியாக உடல் பருமன் குறைவாக உள்ளவர்கள் மட்டுமே உள்ளே சென்று வழிபட முடியும்.

இனி வரும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்லும் வகையில் நுழைவாயிலில் அறிவிப்பு பலகையும், இரும்பு கம்பி தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் உள்ளே செல்ல தகுதியானவர்கள் மட்டுமே செல்ல முடியும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

*குறிப்பு:* இடுக்கு பிள்ளையாரை வழிபட்டால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

-📰 GOPI ALL NEWS 🗞️ 

_28/07/2026_

Post a Comment

0 Comments