சாதி மறுப்பு திருமணம் செய்தால் 8 கிராம் தங்கம் இலவசம் - தமிழக அரசு அசத்தல் திட்டம்

 


காஞ்சிபுரம்:

சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் `டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவி திட்டம்` மூலம் புதுமண தம்பதிகளுக்கு  8 கிராம் தங்க நாணயம்* மற்றும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

யாருக்கு என்ன கிடைக்கும்?

1. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி:

 மணமகன் அல்லது மணமகள் 10-ஆம் வகுப்பு முடித்திருந்தால் *₹25,000 ரொக்கம் + 8 கிராம் தங்க நாணயம்* வழங்கப்படும்.

2. பட்டதாரி / டிப்ளமோ:

பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருந்தால் *₹50,000 ரொக்கம் + 8 கிராம் தங்க நாணயம்* கிடைக்கும்.

தகுதிகள் என்ன?

1. திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் `BC, MBC, SC, ST` பிரிவையும், மற்றொருவர் `FC, BC, MBC` பிரிவையும் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

2. திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. திருமணம் நடந்து 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியானவர்கள் தங்கள் மாவட்ட *சமூக நல அலுவலகத்தை* திருமண சான்றிதழ், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments