திருவண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா- நடைபெற்றது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளித்து அசத்தல்




 திருவண்ணாமலை

திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் மகா குடமுழுக்கு விழா இன்று 02.07.2026 காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள், வேத மந்திரங்கள் முழங்க காலை 10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments