திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற ஆந்திராவை சேர்ந்த பக்தர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மணிக்குமார் (36) என்பவர் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்றுள்ளார். கிரிவலப் பாதையில் உள்ள பிரசித்தி பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சிறிய வாசல் வழியாக உள்ளே சென்ற போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடல் பருமன் காரணமாக வெளியில் வர முடியாமல் அவர் உள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் செல்லும் போது கவனமாக செல்லவேண்டும் என பக்தர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
0 Comments