சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறுமிகள் பாரம்பரிய உடையணிந்து, பக்தி பாடல்களுக்கு ஏற்ப அழகான பரதநாட்டியம் ஆடினர். அவர்களின் நடனத்தை கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர்.
*- செய்தியாளர்: E.கோபி, நம்ம ஊர் மீடியா*
