சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன! வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2026 கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார மஹோற்சவ பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இன்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து, மாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. தேதி : 09-11-2026, திங்கட்கிழமை 📍 இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi 12 *🙏 ஓம் முருகா! 🙏*