சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
ஆரணி ஸ்ரீ அரியாத்தம்மன் கோவில் நவராத்திரி விழா - 10ம் நாள் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் அம்மன் தரிசனம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆரணி, அக்.21:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அரியாத்தம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதன் 10-ம் நாளான நேற்று, ஸ்ரீ அரியாத்தம்மன் *ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினி அம்பாள்* அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகிஷாசூரனை வதம் செய்யும் கோலத்தில், கையில் ஆயுதங்களுடன், சிங்கத்தின் மீது அமர்ந்தபடி அம்பாள் காட்சி அளித்தது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
இந்த சிறப்பு அலங்கார தரிசனத்தை காண ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
