முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார்


கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு (வயது 75) உடல்நலக் குறைவால் காலமானார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு.

நீண்டகால சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த 2026 செப்டம்பர் 9-ஆம் தேதி சென்னை MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவக் குழுவினர் பல்வேறு சிகிச்சைகளை வழங்கியும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால், இன்று 2026 நவம்பர் 19-ஆம் தேதி பிற்பகல் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தார் என MGM மருத்துவமனை சார்பில் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு நம்ம ஊர் மீடியா சார்பில் ஆழ்ந்த இரங்கல்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!