சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் இன்று காலை 10 மணிக்கு - அறுசுவை விருந்து, இரவு ஒய்யாலி ஆட்டம், திருவீதி உலா!
திருமண அழைப்பிதழ்
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வில்லிவாக்கம் சிட்கோ பகுதி.
சென்னை, நவ. 16:
சென்னை வில்லிவாக்கம் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று காலை 10 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து அறுசுவை விருந்து நடைபெற உள்ளது.
மேலும் இரவு ஒய்யாலி ஆட்டம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடைபெற உள்ளது.
மக்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா