சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
இன்று 16/6/2026 முதல் 26/6/2026 வரை ரயில் சேவைகள் மாற்றம் சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவைகள் தற்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவை இயக்கத்தில் ரயில் நேர மாற்றம் மற்றும் ரத்து செய்யப்படுதல் போன்ற பல மாற்றங்கள் தற்காலிகமாக வந்து உள்ளது. ரயில் பாதை பராமரிப்பு காரணமாக திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் மார்க்கத்தில் சில ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் அல்லது மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.இதனால் ரயில் பயணிகள் தங்களுடைய ரயில் பயணம் மற்றும் ரயில் நேரத்தைக் சரிபார்ப்பு செய்து ரயிலில் தாங்கள் பயணம் செய்யலாம் .