சென்னை அம்பத்தூர் அருகே சண்முகபுரம் அண்ணை இந்திரா நகரில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்தது.
வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து திடீரென கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களில் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் வீடு முழுவதும் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் சூரிய மூர்த்தி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உடனே வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த வெடி விபத்தின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். வெடித்த வேகத்தில் அருகில் இருந்த சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன.
தகவல் அறிந்து வந்த புதூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*குறிப்பு:* சமையல் செய்யும் போது சிலிண்டர் கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை அடிக்கடி சோதனை செய்வது நல்லது.
0 Comments