வில்லிவாக்கம் சிட்கோவில் பிரதோஷ பூஜை: திரண்ட பக்தர்கள்




சென்னை, ஜூலை 26

வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அண்ணாமலையார் சிவனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தி பகவானுக்கு வில்வ மாலை அணிவிக்கப்பட்டது. இதில் சிட்கோ மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இத்துடன் ஆடி மாதத்தை முன்னிட்டு கோவிலில் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்றது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தி பாடல்கள் முழங்க கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசமாக காணப்பட்டது.

*- கோபி ஆல் நியூஸ்*

உடனுக்குடன் செய்திகளைப் படியுங்கள் 

Post a Comment

0 Comments