சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
*முனுகப்பட்டு, ஜூலை 28*
முனுகப்பட்டு வாழைப்பந்தல் அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மன் திருக்கோயிலில் ஆடி மாத 2-ம் திங்களை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கூடி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நேற்று காலை முதலே பக்தர்கள் குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வருகை தந்தனர். கோவில் வளாகத்தில் அம்மனுக்கு ஆடி மாத பொங்கல் வைத்து நேர்திக் கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அருள்மிகு ஶ்ரீ பச்சையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மஞ்சள், பால், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
"ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வமும் பெருகும்" என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே ஏராளமானோர் விரதம் இருந்து வழிபாடு செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
*- GOPI ALL NEWS *
