சென்னை ECR-ல குதிரையில் வந்த Zomato டெலிவரி! வைரலாகும் வீடியோ



சென்னை: ECR பாலவாக்கம் பகுதியில் ஒரு இளைஞர், Zomato நிறுவனத்தின் உணவு விநியோகப் பையுடன் குதிரையில் அமர்ந்து உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

பொதுவாக பைக் அல்லது ஸ்கூட்டரில் டெலிவரி செய்யும் நிலையில், இந்த இளைஞர் குதிரையில் சென்று உணவு வழங்கிய காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "Creativity Level 100", "சென்னை தான் வேற லெவல்" என கமெண்ட் செய்து வருகின்றனர்.

டிராபிக் நெரிசலில் கூட வேகமாக செல்ல இப்படி ஒரு ஐடியாவா என பலரும் வியந்து வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது Instagram, Facebook, WhatsApp ஆகியவற்றில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

Post a Comment

0 Comments