திருவண்ணாமலை, ஜூலை 11:*
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தளவ நாயக்கன்பேட்டையில் அமைந்துள்ள செடல் மாரியம்மன் மற்றும் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில்களில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மன் சிலையின் கழுத்தில் இருந்த 2 தாலிகள் மற்றும் கோவிலில் இருந்த உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும், அம்மன் கழுத்தில் தாலி இல்லாததையும் கண்டு அதிர்சியடைந்தனர். உடனே பொதுமக்கள் செங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் பகுதியில் உள்ள CCTV காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்சியும், கோபமும் நிலவுகிறது.
*நாள்:* 11-07-2026
*இடம்:* தளவ நாயக்கன்பேட்டை, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்
World News 512
Breaking news
---

0 Comments