தூத்துக்குடி மாவட்டம் கட்டாலன்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்.பி. கனிமொழியை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகுமுத்துகோன் நினைவு தினத்தையொட்டி அங்கு மரியாதை செலுத்த வந்த கனிமொழி அவர்களுடன் திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக வந்திருந்தனர்.
இந்த நிலையில், "அமைச்சர்கள் மரியாதை செலுத்திய பிறகு தான் கனிமொழியை அனுமதிக்க முடியும்" என போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மற்றும் திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் போலீசாரின் அனுமதியுடன் கனிமொழி மற்றும் கட்சியினர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 Comments