முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முக்கிய செய்திகள் 🗞️ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்றைய பழமொழி

🌿 இன்றைய பழமொழி “சிறு துளி பெரு வெள்ளம்.” 💧🌊 💡 பொருள்: சிறிய சிறிய முயற்சிகள் தொடர்ந்து சேரும்போது, பெரிய வெற்றியாக மாறும். ✨ இன்றைய சிந்தனை: “இன்று செய்யும் சிறிய முயற்சியை அலட்சியப்படுத்தாதீர்கள்; அது நாளைய பெரிய வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.” 📰 Gopi 12 News “உண்மை • நம்பிக்கை • மக்கள் செய்தி” ❤️

அசாமில் நேரலையின்போது நிகழ்ந்த பரபரப்பு!

அசாமில் நேரலையின்போது நிகழ்ந்த பரபரப்பு!* அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நிலவரத்தை ஆற்றுப் பகுதியில் நேரலையாக சேகரித்துக் கொண்டிருந்தபோது, தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி ஆற்று வெள்ளத்தில் விழுந்தார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக உதவி செய்து அவரை பத்திரமாக மீட்டனர்.

தாம்பரம் ரயிலில் பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு - தவறி விழுந்து படுகாயம்

  *சென்னை, ஜூலை 28* தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பெண் காவல் அதிகாரியிடம் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறித்த நபரை பிடிக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண் காவலர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பார்த பொதுமக்கள் செல்போனை பறித்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் வடமாநில இளைஞரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ECR-ல குதிரையில் வந்த Zomato டெலிவரி! வைரலாகும் வீடியோ

சென்னை: ECR பாலவாக்கம் பகுதியில் ஒரு இளைஞர், Zomato நிறுவனத்தின் உணவு விநியோகப் பையுடன் குதிரையில் அமர்ந்து உணவு டெலிவரி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. பொதுவாக பைக் அல்லது ஸ்கூட்டரில் டெலிவரி செய்யும் நிலையில், இந்த இளைஞர் குதிரையில் சென்று உணவு வழங்கிய காட்சிகள் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், "Creativity Level 100", "சென்னை தான் வேற லெவல்" என கமெண்ட் செய்து வருகின்றனர். டிராபிக் நெரிசலில் கூட வேகமாக செல்ல இப்படி ஒரு ஐடியாவா என பலரும் வியந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது Instagram, Facebook, WhatsApp ஆகியவற்றில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் ஆலயத்தில் பிரதோஷ விழா – பக்தர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

  முனுகப்பட்டு முக்கூட்டு சிவன் ஆலயத்தில் இன்று பிரதோஷ சிறப்பு வழிபாடு திருவண்ணாமலை மாவட்டம் முனுகப்பட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முக்கூட்டு சிவன் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நீலமேக சுவாமி மடத்தில் அருள்பாலிக்கும் அய்யன் சிவபெருமானுக்கு இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. பிரதோஷ வழிபாடு சிவபெருமானின் திருவருளைப் பெறுவதற்கான மிகவும் புனிதமான வழிபாடாக கருதப்படுகிறது. இந்த வேளையில் பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் மன அமைதி, ஆன்மிக நலம், குடும்ப ஒற்றுமை, ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் வளம் பெருகும் என நம்பப்படுகிறது. மேலும், வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடைகள் நீங்கி நல்வழி பிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் சிறப்புமிக்க நாளாகவும் பிரதோஷம் விளங்குகிறது. இதனை முன்னிட்டு, அனைத்து பக்தர்களும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையில் பங்கேற்று அய்யனின் பரிபூரண திருவருளையும், ஸ்ரீ நீலமேக சுவாமிகளின் குருவருளையும் பெற்று வாழ்வில் எல்லா நலன்களும் ப...

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் மழைநீர் தேக்கம் - பொதுமக்கள் அவதி

  சென்னை: இராயபுரம் இரயில் நிலையம் நேற்றிரவு சென்னையில் பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் ராயபுரம் ரயில் நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால், பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து செல்லும் காட்சிகள் காணப்படுகின்றன. படத்தில் காண்பது போல் ஆட்டோக்கள் கூட தண்ணீரில் மெதுவாக செல்கின்றன. பெண்கள், முதியவர்கள் தண்ணீரில் நனைந்தபடி செல்வதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். *இடம்*: சென்னை இராயபுரம் ரயில் நிலையம் *தேதி*: 25.07.2026

ஆடி 2-ம் வெள்ளி: மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்கார தரிசனம்

   விழுப்புரம் மாவட்டம்  இன்று ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு மிகவும் விசேஷமான நாளாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்னை அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. தங்க கவசம், மலர் மாலைகள் மற்றும் வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலில் திரண்டனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தி பாடல்கள் ஒலித்தன. கோவில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆடி மாதம் முழுவதும் இதுபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவரம் இடம்:  அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம் நிகழ்வு:  ஆடி 2-ம் வெள்ளி சிறப்பு அலங்காரம் & தரிசனம் அன்னதானம், சிறப்பு பூ...

திருவண்ணாமலையில் நீட் தேர்வுக்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டம்

திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில், வாலிபர்-மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் 24.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் தொடங்கும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு மாணவர்களின் கல்வி மற்றும் சமூக நீதியை பாதிப்பதாகக் கூறி, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்குமாறு வாலிபர்-மாணவர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தருமபுரியில் தலைக்கவச விழிப்புணர்வு: கொரில்லா, ஓணான் பொம்மைகள் மூலம் இனிப்பு வழங்கி வினோத பிரச்சாரம்

  தருமபுரியில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கொரில்லா மற்றும் ஓணான் பொம்மை வேடமணிந்த தன்னார்வலர்கள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை கட்டியணைத்து பாராட்டினர். மேலும், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தலைக்கவசம் அணிவதால் உயிர் பாதுகாக்கப்படுவதுடன், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இந்த வினோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பலரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த முயற்சி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பூக்கள் விலை கணிசமாக உயர்வு: ஒரு கிலோ மல்லிப்பூ 600 ரூபாய்

   16 ஜூலை 2026* ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல ஊர்களில் பூந்தோட்டம் மலர்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோவில் வழிபாடு மற்றும் வீடுகளில் பூஜைக்கு தேவை அதிகரித்ததால் மலர்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் விலை உயர்வால் சற்று சிரமம் அடைந்துள்ளனர். *இன்றைய பூக்களின் விலை விவரம்:* - *ஒரு கிலோ குண்டு மல்லிப்பூ* - 600 ரூபாய் - *ஒரு கிலோ சாமந்தி* - 500 ரூபாய் - *ஒரு கிலோ பன்னீர் ரோஜா* - 250 ரூபாய் வழக்கத்தை விட இந்த வாரம் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடி வெள்ளி முடியும் வரை விலை இப்படியே நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் மலர்த்தூவி மரியாதை

  பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் - அண்ணா சாலை சிலைக்கு திரு.விஜய் அவர்கள் மரியாதை சென்னை: கல்விக்கண் திறந்த காமராஜரின் 124வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திரு விஜய் அவர்கள் அஞ்சலி பெருந்தலைவரின் தியாகங்களையும், கல்வி சேவையையும் போற்றும் வகையில் திரு.விஜய் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வின்போது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். காமராஜரின் கொள்கைகளை பின்பற்றுவோம் என திரு.விஜய் அவர்கள் இந்த நாளில் உறுதியேற்றார். மாநிலம் முழுவதும் அஞ்சலி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அவரது சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். WORLD NEWS 512: TVK

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 தொடக்கம் - PM Modi ஜிந்த்-ல் தொடங்கி வைக்கிறார்

  இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17-ல் தொடக்கம் - பெரம்பூர் ஐ.சி.எஃப்-ல் வடிவமைப்பு சென்னை: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் ஜூலை 17-ம் தேதி ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் தொடங்கி வைக்கிறார். ஹைட்ரஜன் ரயிலின் சிறப்புகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், மாசு இல்லாத பயணத்தை வழங்கும் வகையிலும் இந்த ஹைட்ரஜன் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டீசல் பயன்பாடு குறைந்து, இந்திய ரயில்வேயில் புதிய யுகம் தொடங்கவுள்ளது. சென்னை பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையான ஐ.சி.எஃப், இந்த ரயிலை முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்துள்ளது. "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்கப்படுகிறது. ஜிந்த் நகரில் தொடக்க விழா ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன்பின் ஹைட்ரஜன் ரயில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெர...

திருவண்ணாமலை மாநகராட்சி புதிய ஹெல்ப்லைன் 74488 32392 - குடிநீர், கழிவுநீர் புகார்கள்

திருவண்ணாமலை மாநகராட்சி பொதுமக்கள் உதவி மையம் தொடக்கம் - புகார்களுக்கு புதிய ஹெல்ப்லைன் எண் அறிவிப்பு திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சி பகுதி பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் புதிய "பொதுமக்கள் உதவி மையம்" தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான ஹெல்ப்லைன் எண்ணை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. என்னென்ன புகார்கள் தெரிவிக்கலாம்? திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பொதுமக்கள் பின்வரும் பிரச்சனைகளுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்: குடிநீர் வழங்கல் தொடர்பான புகார்கள் கழிவுநீர் அகற்றும் பணிகள் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் மின் விளக்குகள் பழுது சரிபார்தல் இதர மாநகராட்சி சார்ந்த புகார்கள் தொடர்பு எண் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க +91 74488 32392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த உதவி மையம் மூலம் பொதுமக்களின் பிரச்சனைகள் விரைவாக தீர்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. Source: திருவண்ணாமலை மாநகராட்சி

65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச திருப்பதி சாமி தரிசனம்

*WORLD NEWS 512 - இணையதள செய்தி*  *65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச திருப்பதி தரிசனம்* *ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டம் அறிவிப்பு* *திருப்பதி: முதியோர்களுக்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு *திரு. நாரா சந்திரபாபு நாயுடு* அவர்கள்  "இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை" தொடங்கி வைத்துள்ளார்.  *திட்டத்தின் முக்கிய விவரங்கள்:* *பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் *இலவச தரிசன நேரங்கள்:* காலை *10:00 மணி* மற்றும் பிற்பகல் *3:00 மணி* *நுழைவு முறை:* ஆதார் போன்ற புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் S-1 இல் காட்டினால் மட்டும் போதும்.  *முதியவர்களுக்கான சிறப்பு வசதிகள்:* 1. *இலவச உணவு:* தரிசனத்திற்கு பிறகு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் ஆடா பால் வழங்கப்படும். 2. *பேட்டரி கார் வசதி:* கோயிலுக்குள் செல்லவும், வெளியே வரவும் இலவச பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. *கோயிலுக்கு செல்லும் வழி:* கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் ஏற தேவையில்லை...

பழனி கோயில் விடுதி கட்டணம் உயர்வு! நாளை முதல் அமல் - ரூ.300 முதல் ரூ.1500 வரை உயர்வு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்கும் விடுதி அறைகளின் கட்டணம் *நாளை முதல் உயர்தபடுகிறது* என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. *புதிய கட்டண விவரம்:* 1. *கட்டணம்:* தற்போது ரூ.300 முதல் ரூ.1500 வரை உயர்வு 2. *முன்பதிவு:* ஆன்லைன் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் 3. *அமல் தேதி:* 13.07.2026 முதல் பக்தர்கள் வருவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து விட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம்` `தேதி: 12.07.2026

மாதவரம் 6 பவுன் தாலி செயின் மீட்டு ஒப்படைத்த கழிவுநீர் ஊழியர்கள்

  சென்னை, மாதவரம்:* மாதவரம் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் தவறுதலாக விழுந்த 6 பவுன் தங்க தாலி செயினை, பெருநகர கழிவுநீர் அகற்றும் ஊழியர்கள் 4 மணி நேரம் போராடி தேடி கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் தாலி செயின், தவறுதலாக கழிவுநீர் தொட்டியில் விழுந்துவிட்டது. இதனை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருநகர கழிவுநீர் அகற்றும் ஊழியர்கள் திலீப், ராஜேஷ், சுசிகரன், அருண், சுரேந்தர், சாமுவேல் ஆகியோர் தொடர்ந்து 4 மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இறுதியில் கழிவுகளுக்கு மத்தியில் இருந்த அந்த 6 பவுன் தங்க தாலி செயினை கண்டுபிடித்து, பெண்ணிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். நகையை திரும்பப் பெற்ற பெண்ணும், பொதுமக்களும் ஊழியர்களின் நேர்மைக்கும், உழைப்புக்கும் நன்றி தெரிவித்து பாராட்டு தெரிவித்தனர். "கடமையை செய்தோம்" என அமைதியாக சென்ற ஊழியர்களின் செயல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான வைரல் வீடியோ

  *பள்ளி பேருந்தில் இருந்து இறங்கும் போது கவனம்! விபத்தை தடுக்க முக்கிய அறிவுறுத்தல்* பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி பேருந்தில் இருந்து ஒரு சிறுவன் இறங்கிய உடன், பேருந்தின் பின்புறம் வழியாக சாலையை கடக்க முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக வாகனம் ஒன்று வேகமாக வருகிறது. அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வீட்டில் 2-க்கு மேல் LPG சிலிண்டர் வைத்தால் சட்ட நடவடிக்கை: 7 ஆண்டு வரை சிறை

 *சென்னை:* வீடுகளில் 2-க்கு மேல் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி கூடுதல் சிலிண்டர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?*  *பறிமுதல்*: கூடுதலாக உள்ள சிலிண்டர்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்படும் - *சட்டப்படி நடவடிக்கை*: வழக்கு பதிவு செய்யப்படும் - *சிறை தண்டனை*: 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் இது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மற்றவர்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும்.  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை வீட்டில் வைத்திருப்பது விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டில் அனுமதிக்கப்பட்ட 2 சிலிண்டர்கள் மட்டுமே வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சட்டத்தை மதிப்போம், பாதுகாப்பாக இருப்போம். *குறிப்பு:* ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 domestic LPG இணைப்புகள் மட்டுமே அனுமதி

தென்னிந்தியாவின் இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா காலமானார்

தென்னிந்தியாவின் இசைக் குயில் எஸ். ஜானகி அம்மா காலமானார். புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், தென்னிந்தியாவின் இசைக் குயில் எனப் போற்றப்பட்ட S. Janaki அம்மா இன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள ஜானகி அம்மாள், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய திரையிசையில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார். அவரது இனிமையான குரல் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது. ஜானகி அம்மாளின் மறைவு செய்தி இசை உலகினரையும், திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களின் மனதில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும் அந்த மெல்லிசைக் குரல் இன்று மௌனமானாலும், ஜானகி அம்மாளின் பாடல்கள் என்றும் அழியாத நினைவாக வாழும். — World News 512

ஒரு மணி நேரத்தில் ₹5,000 லாபம். மெட்ரோ ஸ்டேஷனில் ₹100 குடையை ₹200-க்கு விற்று அசத்திய வியாபாரி.

  *சென்னை:* மழை காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் ₹5,000 லாபம் பார்த்த ஒரு வியாபாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நபர் ₹100 வீதம் மொத்தம் 50 குடைகளை ₹5,000-க்கு வாங்கியுள்ளார். கடுமையான மழை பெய்யும் நேரத்தில், மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் நின்று வியாபாரம் செய்துள்ளார். மழையின் காரணமாக வெளியே வர முடியாமல் தவித்த பொதுமக்கள், உடனடியாக அவரிடம் ₹200 கொடுத்து குடைகளை போட்டி போட்டு வாங்கியுள்ளனர். வெறும் ஒரு மணி நேரத்திற்குள் 50 குடைகளையும் விற்று தீர்த்த அவர், ₹5,000 முதலீட்டில் ₹10,000 வருமானம் ஈட்டியுள்ளார். அதாவது ₹5,000 நிகர லாபம் பார்த்துள்ளார். "சரியான நேரமும், சமயோசித புத்தியும் இருந்தால் மழையே கூட பணமாக மாற்ற முடியும்" என்பதற்கு இவர் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. *இடம்:* மெட்ரோ ரயில் நிலையம் சென்னை.